ஸ்ருதிஹாசனை பிரிந்தது குறித்து சாந்தனு கூறியதை கேட்டீங்களா..?

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் ஸ்ருதிஹாசன் ஒருவர் அக்சரா ஹாசன். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நல்ல பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தில் பாடகியாக அறிமுகமானவர். இதுவரை பல பாடல்களை அவர் பாடி இருக்கிறார். இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் அவர் நெருக்கமாக நடித்து வெளியிட்ட இனிமேல் இசை வீடியோ பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சூரியாவுக்கு ஜோடியாக அறிமுகம்

கடந்த 2011ம் ஆண்டில் டைரக்டர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் நடிகர் சூரியாவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து, தமிழில் 3 என்ற படத்தில் நடித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்த 3 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் பள்ளி மாணவியாக ஸ்ருதிஹாசன் நடிப்பு பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.

இந்த படத்தில் பள்ளி மாணவன் கேரக்டரில் சிவகார்த்திகேயனும் தனுஷின் நண்பராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழில் புலி, விவேகம், பூஜை, சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்த ஸ்ருதிக்கு பெரிய அளவில் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தாராளமான கவர்ச்சியில்…

அதனால் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதிஹாசனுக்கு, அவர் அங்கு தாராளமான காட்சி காட்டி நடித்ததால் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதேபோல் பிரசாந்த் நீல் இயக்கிய பிரபாஸ் நடித்த சலார் படத்தில் நாயகி வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

சாந்தனு ஹசாரிகா

இதற்கிடையே தனக்கு பிடித்த பாய் பிரண்டுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்வது ஸ்ருதிஹாசனின் வழக்கம். அந்த வகையில் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் நீண்ட நாட்களாக லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

அடிக்கடி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்தார். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வந்தனர்.

ஆனால் திடீரென இரண்டு பேருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

அன் – பாலோ

மேலும் இருவரும், ஒருவரை ஒருவர் சோசியல் மீடியாவில் அன் -பாலோ செய்துள்ளனர். தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்த சாந்தனுவின் அனைத்து புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் டெலிட் செய்து விட்டார்.

பேச விரும்பவில்லை

இதுகுறித்து சாந்தனுவிடம் மீடியா தரப்பில் இருந்து கேட்டபோது, மன்னித்து விடுங்கள். அதைப்பற்றி பேச நான் விரும்பவில்லை, கூறியிருக்கிறார்.

இதையடுத்து அவர்களது காதல் முறிவு உண்மை என்பது தெரிய வந்துள்ளது. ஸ்ருதிஹாசனை பிரிந்தது உண்மைதான் என்று சாந்தனு ஹசாரிகா இதன்மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam