மோசமான பீரியட்ஸ் என்னை அதிகமா பாதிச்சுடுச்சு.. ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சீக்கிரமே பிரபலமான வாரிசு நடிகைகளில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கியமானவர். ஆரம்பத்தில் ஹிந்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த சுருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர் நடித்த 3 திரைப்படம் அதிக பிரபலமான திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சுருதி.

தமிழில் சுருதி:

அதன் பிறகு தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர துவங்கின. உலகநாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவர் தான் நடிகை சுருதிஹாசன். அதற்குப் பிறகு கமலஹாசன் விவாகரத்து பெற்ற பிறகும் கூட சுருதிஹாசன் அவருடன் நல்ல நட்பில்தான் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு ஏற்படும் மோசமான மாதவிடாய் பிரச்சனை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் சுருதிஹாசன். அதில் அவர் கூறும் பொழுது எனது வாழ்நாளில் எனது முதல் மாதவிடாய் பிரச்சனையை நான் எதிர்கொண்டபொழுதே அது எனக்கு மிகப்பெரிய போர்க்களமான விஷயமாக இருந்தது.

உடல் பிரச்சனை:

அது எனக்கு அதிக வலிகளை ஏற்படுத்தியது. ஆனால் அது சரி செய்ய முடியாத ஒரு பிரச்சனை என்று கூறப்பட்டதால் அதை தாங்கிக் கொண்டு வாழ பழகிக் கொண்டேன். ஒவ்வொரு முறை மாதவிடாய் பிரச்சனை ஏற்படும் பொழுதும் அது நரகம் போன்ற வலியை கொடுக்கும்.

படப்பிடிப்புகளில் இருக்கும் பொழுது பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடம் இந்த பிரச்சனையை என்னால் சொல்லவும் முடியாது. இந்த மாதிரியான பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்ல முடியாது.

கஸ்டத்திற்கு நடுவே சினிமா:

அதனால் இந்த வலிகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு நடனமாடும் காட்சிகளில் கூட சிரித்துக் கொண்டே நடனமாடி இருக்கிறேன் என்று கூறுகிறார் சுருதிஹாசன். தற்சமயம் பேன் இந்தியா திரைப்படமான சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடித்திருந்தார்.

சலார் 2 திரைப்படத்தில் இவருக்கு இன்னும் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. Polycystic ovary syndrome (PCOS)
நோயின் காரணமாக மாதவிடாய் காலங்களில் அதிக ரத்த போட்டு ஏற்படக்கூடிய ஒரு நோய் அது என்று கூறப்படுகிறது. இதனால் சிலருக்கு குழந்தை பிறப்பதில் கூட பிரச்சனை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version