சந்திலேகா சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் கர்ப்பம்..! – வைரல் போட்டோஸ்..! – குவியும் வாழத்துக்கள்..!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர்.(Shwetha Bandekar) சீரியல் மட்டுமின்றி, தமிழ் சினிமாவிலும் சில முக்கிய படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழ் நடிகையாக மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் சில படங்களில் ஸ்வேதா நடித்துள்ளார்.

ஆழ்வார் படத்தில், நடிகர் அஜித்குமார் தங்கையாக ஸ்வேதா நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து பூவா தலையா, பயணங்கள் தொடரும், மீராவுடன் கிருஷ்ணா, வீரசோழன், இதயம் திரையரங்கம், நான்தான் பாலா, பூலோகம் ஆகிய படங்களில் ஸ்வேதா நடித்திருக்கிறார்.

Shwetha Bandekar

எனினும் சின்ன சின்ன கேரக்டர்களில் மட்டுமே இவர் நடித்ததால், வண்ணத்திரையில் இவர் எதிர்பார்த்த இடத்துக்கு வர முடியவில்லை. தெலுங்கில் இவர் நடித்த படம் ‘சீடுகாடு’ என்ற ஒரு படம் மட்டுமே.சென்னையை சொந்த ஊராக கொண்ட ஸ்வேதா பண்டேகர் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை சென்னையிலேயே முடித்தார். சென்னை, பிஎம்ஆர் கல்லூரியில் பிடெக் படித்தார்.

தொடர்ந்து எம்பிஏ படித்துள்ளார்.நடிப்புத்துறையில் ஆர்வம் கொண்ட ஸ்வேதா, தமிழ் தெலுங்கு சினிமா படங்களில் நடித்து, பெரிய அளவில் பேசப்படாத நிலையில், அவரது கவனம் சீரியல் பக்கம் திரும்பியது சன்டிவியில் மகள் என்ற தொடரில் நடித்தார்

Shwetha Bandekar

தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, நிலா, ரோஜா, மகராசி, அன்பே வா என்ற டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த தொடர்கள் அனைத்துமே ரசிகர்களின் பெரிய ஆதரவுடன் மிகவும் ரசிக்கப்படும் தொடர்களாக ஒளிபரப்பாகி வருகின்றன.எனினும், ஸ்வேதாவுக்கு அதிக பிரபலம் மற்றும் வரவேற்பை பெற்றுத் தந்த சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல்தான்.

ஏனெனில் இந்த சீரியலில், சந்திரா – நிலா என்ற 2 கேரக்டர்களில், ஸ்வேதா நடித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த தொடர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஏறக்குறைய 9 ஆண்டுகளாக இந்த தொடர், வெற்றிக்கரமாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது.

Shwetha Bandekar

நடிக்க வருவதற்கு முன், சோப் மற்றும் நெய் விளம்பரங்களில் நடித்தவர் ஸ்வேதா என்பதும் கவனிக்கத்தக்கது.எதிர்பார்த்த மாதிரி சினிமா வாய்ப்பு கிடைக்காவிட்டால், அதற்கு அடுத்தபடியாக தனது வாழ்க்கை பயணத்தை சிறப்பாக்கிக் கொள்ள எந்த பயணத்தை தேர்வு செய்வது என்பதில், ஸ்வேதா தெளிவாக இருந்தார். அதனால், அவர் டிவி பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

சிறந்த நடிப்பாற்றல் கொண்ட தன்னால், நல்ல நடிகையாக சீரியல்களில் நிரூபிக்க முடியும் என்று அவர் நம்பியதால், அவருக்கு கிடைத்த கேரக்டர்களை நல்ல விதமாக செய்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார், அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்த நிலையில், சிறந்த சீரியல் நடிகையரில் ஒருவராக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

Shwetha Bandekar

இப்போது ஸ்வேதா பண்டேகர் கர்ப்பிணியாக இருக்கிறார். அவர் வயிறு பெரிதான நிலையில், கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி தரும் புகைப்படங்களை தனது, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார் இதை பார்த்து மகிழும் அவரது ரசிகர்கள் பலரும், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்,

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …