இந்த படத்தில் நடிக்கும் போது ரெண்டு ஜட்டி போட்டிருந்தேன்..! நடிகர் சித்தார்த் ஒப்பன் டாக்..!

சித்தார்த் சூரியன் நாராயணன் என்று அழைக்கப்படக்கூடிய தென்னிந்திய திரைப்பட நடிகரான நடிகர் சித்தார்த் மிகச்சிறந்த பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என்ற பன்முகத் திறமையை கொண்டவர்.

திரை உலகில் இயக்குனராக வலம் வர வேண்டும் என்று நினைத்த இவர் நடிகராக பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார்.

நடிகர் சித்தார்த்..

சித்தார்த் நடிப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமானது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பாராட்டுகளை பெற்று வசூலை தந்த படமாக உள்ளது. இதனை அடுத்து இவரது வித்தியாசமான நடிப்பை ஆயுத எழுத்து திரைப்படத்தில் பார்த்து இருக்கலாம்.

மேலும் காதலில் சொதப்புவது எப்படி? தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன், அண்மையில் வெளி வந்த சித்தா போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு ஒரு சிறப்பான இடத்தை பெற்று தந்தது.

இவரைப் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அதை பற்றி எல்லாம் எந்தவித கவலையும் இல்லாமல் தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்று இருக்கும் இவர் அடிக்கடி சர்ச்சை மிகு பேச்சுக்களில் சிக்கி விடுவார்.

பல நடிகைகளோடு டேட்டிங் செல்லக்கூடிய நபராக சித்தார்த் சித்தரிக்கப்பட்டதோடு, அதிதி ராவோடு நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து பல்வேறு கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியது.

ரெண்டு ஜட்டி விஷயம்..

2003 ஆம் ஆண்டு 29 ஆகஸ்ட் அன்று இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளி வந்த பாய்ஸ் திரைப்படமானது பிரபலமாக ரசிகர்களின் மத்தியில் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக திகழ்ந்தது. அதோடு இந்த படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

அந்தப் படத்தில் சித்தார்த் நடிக்கும் பொழுது ஜட்டி சீன் ஒன்று இடம் பெற்று இருந்ததை இன்று வரை எந்த ஒரு இளைஞனாலும் மறக்க முடியாது. அந்த அளவு படு பேமஸான சீனாக திகழ்ந்தது.

இந்த சீன் எடுக்கப்பட்ட விதத்தை பற்றி அண்மை பேட்டி ஒன்றில் சித்தார்த் கூறிய விஷயமானது ரசிகர்களின் மத்தியில் ஷாக்யை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீனை எடுக்கும் போது ஒரு மிக அற்புதமான டெக்னிக்கை ஃபாலோ செய்தாராம். இனி யாராவது இது போல சீன் எடுக்க வேண்டும் என்றால் இதை ஃபாலோ செய்யலாம் என்ற ரீதியில் நடிகர் சித்தார்த் அந்த விஷயத்தை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்.

இதில் அந்த சீனை எடுக்கும் போது சித்தார்த் இரண்டு ஜட்டிகளை போட்டு இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் முதல் டேக் எடுக்கும் போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால் இதனை அடுத்து இரண்டு ஜட்டியும் விலக்கி விட்டோமோ? என்று அவசரத்தில் இரண்டு கைகளால் அந்த பகுதியை வேகமாக மறைத்ததாக கூறினார்.

மேலும் அந்தப் பெண் வேறு யாரும் அல்ல. ஹீரோயின் அம்மா தான். இவர் கால் விறுவிறுப்பாக உள்ளது என்று சற்று தூரம் நடந்து செல்லும் போது யாரோ ஒரு பையனை பார்க்கும் போது அவன் ஜட்டியை கழட்டியதால் கத்தியதாகவும் தன்னை பார்த்து கத்த வில்லை என்பது இறுதியில் தான் புரிந்தது என்று கூறினார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அந்த படத்தில் நடிக்கும் போது சித்தார்த் இரண்டு ஜட்டி போட்டு இருந்தார் என்ற பேச்சு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version