என்னது… அப்ப இந்த விஷயம் உண்மைதானா… அந்த நடிகையோட நடிகர் சித்தார்த் …!

நடிகர் சித்தார்த் மணிரத்தினத்தின் உதவியாளராக பணியாற்றியவர். மேலும் பல படங்களில் பாங்கான வேடங்களில் நடித்து தூள் கிளப்பியவர்.

திரைஉலகை பொருத்தவரை கிசுகிசுக்கள் என்பது அடிக்கடி வரக்கூடிய ஒன்றுதான்.இந்த கிசுகிசுக்கள் ஏற்படுவது கூட அவர்களை பிரபலப்படுத்தும் என்று நாம் கூற முடியும்.

 இந்த வரிசையில் தற்போது நடிகர் சித்தார்த் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார் என்றால் அது விவகாரமான ஒரு விஷயத்தில் தான். அப்படி என்ன அது விவகாரமான விஷயம் என்று நீங்கள் யோசிப்பது நன்றாகவே தெரிகிறது.

 ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய நடிகர் சித்தார்த் தற்போது பிரபல முன்னணி நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி இருப்பது  புதிதல்ல.

எனினும் அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகையான அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தது.

 எனினும் அவற்றையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத ரசிகர்கள் இது வழக்கம்போல் வருவதுதான் என்று இருக்கக்கூடிய வேளையில் குண்டை போட்டு அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய நிலையில் தற்போது அந்த ரிலேஷன்ஷிப் உறுதியானது போல தெரிகிறது.

 இந்த ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்யும் விதமாக தற்போது வைரலாக கூடிய ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறா.ர் அதுவும் அதிதி ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் பிரின்சஸ் ஆப் ஹார்ட் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் அவர் இருவரும் நெருங்கி இருக்கக்கூடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து இவர்கள் உண்மையில் காதலித்து வருகிறார்கள் என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

 தற்போது இன்ஸ்டாகிராமில் வெளிவந்துள்ள இந்த புகைப்படம் மற்றும் அந்த வார்த்தைகள் தான் ரசிகர்களின் மனதை சற்று புரட்டி விட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு அதில் எழுதப்பட்டிருக்கக் கூடிய வார்த்தைகளின் ஆழம் காதலை வெளிப்படுத்தி உள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அல்லாமல் இது பிறந்தநாள் வாழ்த்து மட்டுமல்ல உங்கள் காதலுக்கான வாழ்த்தும் கூட என்று நகைச்சுவை உடன் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்திருப்பது தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam