இது தான் எஸ்.ஜே.சூரியாவின் பொழப்பு.. இனிமே இப்படி போடுங்க..! மேடையிலேயே கூறிய சித்தார்த்..!

தமிழ் திரை உலகில் ஆரம்ப காலத்தில் இயக்குனராக அசத்திய எஸ்.ஜே.சூரியா தற்போது தனது அசாத்திய நடிப்பு திறமையால் நடிப்பு அசுரன் என்ற பெயரை பெற்றிருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த செல்வாக்கை பெற்றுவிட்டார்.

ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்து உள்ளது.

இதுதான் எஸ் ஜே சூரியாவின் பொழப்பு..

இந்த சூழ்நிலையில் எஸ் ஜே சூரியா இயக்கிய படங்கள் பல இவருக்கு வெற்றியை தந்த போதும் அதிக அளவு புகழ் இவர் நடித்த படங்களின் மூலம் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

இதனை அடுத்து எஸ் ஜே சூரியாவை தற்போது நடிகர் சித்தார்த் பாராட்டி பேசி இருப்பது பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற வைத்துள்ளது. பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரக் கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது எஸ் ஜே சூர்யா குறித்து பாராட்டக் கூடிய வகையில் பேசி இருந்தார்.

இனிமே இப்படி போடுங்க..

இந்த பேச்சில் இவர் பேசும் போது எங்கு சென்றாலும் இவரது பெயருக்கு முன்னால் நடிகர் என்று போடப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய இவர் எஸ் ஜே சூர்யாவின் பெயருக்கு முன்னாள் இயக்குனர், பாடகர் எழுத்தாளர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

எனினும் அவர் வெற்றியடைந்ததற்கு காரணம் நடிப்பு துறை தான் இனி மேல் இது தான் அவருடைய பொழப்பு. எனவே எஸ்ஜே சூரியாவின் பெயரை போடுவதற்கு முன்பு நடிகர் எஸ் ஜே சூரியா என்று போடுங்க என்று மேடையிலேயே பேசியது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

மேடையில் பேசிய சித்தார்த்..

மேலும் மேடையில் பேசிய இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் அண்மை காலமாக எஸ் ஜே சூரியா நடித்து வரக்கூடிய படங்களில் அவரது ஹீரோயிசமும் ஆன்ட்டி ஹீரோயிசமும் மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை அடுத்து ரசிகர்கள் ரசிக்க கூடிய வகையில் இவர் தனது அபார நடிப்பு திறனை ஆன்டி ஹீரோவாக நடித்து வெளிப்படுத்துவதை பார்த்து பலரும் வியந்து போய் இருக்கிறார்கள்.

இவரது இந்த நடிப்பில் அசந்து போய் சித்தார்த் இவரை நடிக்க என்று போட்டு அழைக்க வேண்டும் என்று சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

உங்களுக்கு அவர் கூறிய கருத்தில் ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் அதை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளலாம் மேலும் உங்கள் நண்பர்களோடு பேசி உங்களது அபிப்ராயங்களையும் சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version