நடிகை சித்தி இட்னானி ( Siddhi idnani ) வெந்து தணிந்தது காடு எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் சித்தி இட்னானி இதுவே தமிழில் இவர் நடித்த முதல் படமாகும்.முதல் படத்திலேயே நிறைய ரசிகர் பட்டாளங்களை தன் வசம் ஈர்த்தார்.
நடிகை சித்தி இட்னானி 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மும்பையைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் பள்ளிப்படிப்பின் போதே நடிப்பில் ஆர்வம் கொண்ட மாணவியாக செயல்பட்டார்.
பிறகு பள்ளி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்த சித்தி இட்னானி நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Siddhi Idnaniஇதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு கிராண்ட் ஹோலி எனும் திரைப்படத்தில் குஜராத்தில் அறிமுகமானார்.இந்த படமே இவரது முதல் திரைப்படம் ஆகும். இதனை அடுத்து ஜம்பலக்கடி பம்பா எனும் தெலுங்கு திரைப்படத்தில் முதல் முதலாக நடித்த தொடங்கினார்.
பிறகு தெலுங்கு சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
Siddhi Idnaniமேலும் தெலுங்கில் அனுப்பின்னடி ஒகட்டி ஐநடி உக்கட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.இதன் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.முதல் படத்திலிருந்து எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சித்தி இட்னானி மேலும் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் தமிழில் வரத் தொடங்கின.
தற்சமயம் 100 கோடி வானவில் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இன்னும் இந்த திரைப்படம் வெளியாகாத நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Siddhi Idnaniமேலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட இவன் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர உள்ளது.
மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார்.இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
Siddhi Idnaniமேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.