“காப்பி, டீ பிரியரா? நீங்க..!” – இத கோடையில அதிகமா குடிக்காதீங்க ப்ளீஸ்..!

கொளுத்தி எரியும் கோடையில் உங்கள் உடல் நிலையை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் காலை எழுந்ததுமே பல் தேய்கிறோமோ, இல்லையோ பெட் காபி, டீ குடிக்க வேண்டும் என்பது பலரது பழக்கமாகவும் வழக்கமாகவும் உள்ளது.

இந்த பழக்கத்தை நீங்கள் இந்தக் கோடைகாலத்தில் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற ஆபத்துக்கள் ஏற்படுகிறது. கோடையில் நீங்கள் அதிக அளவு காபிக்கு குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாமா.

கோடையில் காப்பி, டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

கோடை காலத்தில் நீங்கள் அடிகனவு காபி டீ போன்றவை குடிப்பதன் மூலம் உங்களுக்கு தூக்கம் இன்மை அதிகளவு ஏற்படும். எனவே இந்த கோடை காலத்தில் நீங்கள் காபி டீ குடிப்பதை தவிர்க்கவும்.

கோடை காலத்தில் டீயை அதிகளவு குறிக்கும் போது 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் உணவுக் குழாய்களில் ப்ரோஸ்டேட் புற்று நோயை உண்டு பண்ண கூடிய காரணியாக இந்த டீ இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.

கோடையில் அடிக்கடி காபியை குடிப்பதன் காரணத்தால் நரம்புத்தளர்ச்சி ஏற்படும் இதற்கு காரணம் காபியில் உள்ள காபீன் என்ற வேதிப்பொருள். மேலும் வெயிலின் தாக்கம் தாங்காமல் இந்த கஃபினும் உடலில் அதிகமாக சேருவதின் மூலம் மயக்கம் ஏற்படும்.

இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தக்கூடிய சக்தி இந்த காபிக்கு உள்ளதால் காபியை அதிகம் குடிப்போருக்கு விரைவில் ரத்த சோகை ஏற்படும்.

மேலும் இது இதயத்தில் இருக்கக்கூடிய வால்வுகளை விரைப்படையச் செய்து பல வித பாதிப்புகளை இதயத்திற்கு ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. எனவே காபியை கோடையில் ஒருமுறை குடித்தாலே போதுமானது இல்லை என்றால் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே இந்த கோடையில் நீங்கள் காப்பி, டீ அதிகளவு எடுப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக பழரசங்கள், இயற்கையாக கிடைக்கும் நுங்கு, தர்பூசணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து இருக்கக்கூடிய இந்த பழங்களை உண்பதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …