டைவர்ஸ், ப்ரேக் அப் ஆனாலும் தன்னுடைய Exஐ விட்டுக்கொடுக்காத நான்கு நடிகர்கள்..!

சினிமா வாழ்க்கையில் நடிகர் நடிகையர் திருமண வாழ்வு என்பது பலருக்கும் சரியாக அமைவது இல்லை. சிலரது ஆத்மார்த்தமான காதல் சில காலங்களில் முறிந்து விடுகிறது. கணவன் மனைவியாக வாழும் நட்சத்திர தம்பதிகள் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் இப்படி பல நட்சத்திர ஜோடிகளின் காதல் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது. பலரது தாம்பத்ய வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்திருக்கிறது.

என்னதான் டைவர்ஸ் பிரேக் அப் என ஆனாலும் தன்னுடைய முன்னாள் மனைவி அல்லது முன்னாள் காதலியை விட்டுக் கொடுக்காத நடிகர்கள் பற்றி தான் இந்த பதிவு.

சிம்பு

முதலாக நடிகர் சிம்பு தன்னுடைய முன்னாள் காதலிகளான நடிகை நயன்தாரா மற்றும் ஹன்சிகா குறித்து எந்த ஒரு இடத்திலும் தரக்குறைவாகவோ அல்லது அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவோ பேசியது கிடையாது நடிகர் சிம்பு.
இன்னும் சொல்லப்போனால் காதல் முறிவுக்கு பிறகும் அவர்களுடன் படங்களில் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு அவர்களுடன் நட்பாகவும் பழகியவர் நடிகர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: ரெசார்ட்டில் இளம் நடிகருடன் ஹீரோயின் அம்மா.. வேட்டையாடப்படும் அவலம்.. அம்பலப்படுத்திய பிரபலம்..

தனுஷ்

அடுத்ததாக நடிகர் தனுஷ் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டாலும் எந்த ஒரு இடத்திலும் தற்போது வரை தன்னுடைய முன்னாள் மனைவி குறித்து இழிவான அல்லது மோசமான எந்த கருத்தையும் பதிவு செய்யாதவர் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
வம்படியாக ஒரு பேட்டியில் தங்களுடைய முன்னாள் மனைவி பற்றி கேட்டபோது கூட அவருடன் சேர்ந்து இருந்த காலங்கள் மறக்க முடியாதவை அந்த அழகான நாட்களை கொடுத்த அவருக்கு நன்றி என பதில் கொடுத்திருந்தார் நடிகர் தனுஷ்.

விஷ்ணு விஷால்

அதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷால், தன்னுடைய முதல் மனைவியின் உழைப்பும் முயற்சியும் யோசனையும் கட்டாகுஸ்தி படத்திற்கு உதவி இருக்கிறது அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என படத்தின் வெற்றி விழாவின் போது பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள்: சாகும் போது கூட இது வேணுமா.? பஞ்சாயத்து கூட்டிய மாளவிகா மோகனன்.. நயன்தாரா கொடுத்த நச் பதில்..

கமல்ஹாசன்

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய காதலியான கௌதமியை பிரிந்து விட்ட பிறகும் உத்தம வில்லன் படத்தின் வெற்றி விழாவில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக பேசியிருந்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயங்களில் இருந்து பொதுவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நம்முடைய காதலை நம்மை பிரிந்து சென்று விட்டார். அல்லது நம்முடைய மனைவி நம்மை விவாகரத்து செய்துவிட்டார் என்றாலும் அவர்களை கொச்சைப்படுத்துவது என்பது தங்களை தாங்களே கொச்சைப் படுத்திக் கொள்வதற்கு சமமாகும்.

ஆண்மை ஆகாது

அது மட்டுமில்லாமல், தன்னை நம்பி காதலித்த அல்லது தன்னை நம்பி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணை தங்களை விட்டு பிரிந்து சென்ற பிறகு தூற்றுவது என்பது ஆண்மை ஆகாது என்பதும் இங்கே உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
ஜெண்டில்மேன்கள்

டைவர்ஸ், ப்ரேக் அப் ஆனாலும் தன்னுடைய Exஐ விட்டுக்கொடுக்காத நான்கு நடிகர்களும் உண்மையிலே இந்த விஷயத்தில் ஜெண்டில்மேன்களாக நடந்துக்கொண்டுள்ளதாக, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version