இனிமே கல்யாணத்தை பத்தி கேள்வி கேப்பீங்க.. சிம்புவின் வீடியோவை பகிர்ந்த பிரேம்ஜி..!

திருமணம் குறித்து நடிகர் சிலம்பரசன் பேசிய வீடியோவை, கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைலராகி வருகிறது.

திருமணம்

மனித வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்யாவசியமானதாக இருந்தது. ஆனால் சமீபமாக திருமண வாழ்க்கை என்பதை பலரும் மறுத்து, முரட்டு சிங்கிளாகவே வாழ ஆசைப்படுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், அவரவர் சுயதன்மையை திருமணம் இழக்கச் செய்கிறது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஒரு ஆணால், திருமணத்துக்கு பிறகு அவனது சுய வாழ்க்கையை வாழ முடிவதில்லை.

மனைவியின் எதிர்பார்ப்புகள், குடும்ப சூழல்களால் அவன் தன் விருப்பங்களை இழக்கிறான். நாளடைவில் அவனே விரக்தியான நிலைக்கு தள்ளப்படுகிறான்.

அதேபோல் பெண்களுக்கும் திருமணத்துக்கு பிறகு பலவிதமான நெருக்கடிகளும், நிர்பந்தங்களும் ஏற்படும்போது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம், அமைதி, நிம்மதி இழப்பதாகவே தோன்றுகிறது.

அதுவும் பணக்கார வீட்டில் வாழ்ந்த பெண்கள், இந்த கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை. அதுவும் தங்களது சுதந்திரத்தை பாதிப்பதாக கருதுகின்றனர்.

நடிகர், நடிகையர் திருமண வாழ்க்கை

அதனால் பெரும்பாலான மக்களின் குடும்ப வாழ்க்கை, குறிப்பாக திருமண நடிகர், நடிகையர் திருமண வாழ்க்கையில் இந்த ஈகோ பிரச்னையால், விரைவில் விவாகரத்து என்பதில் முடிகிறது.

அதே போல் சில நடிகர்கள் வயது 40 கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். மீடியாக்களிலும் அவர்களை சந்திக்கும் முதல் கேள்வியாக உங்களது திருமணம் எப்போது என்பதே முதல் கேள்வியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:  தொப்புளில் சம்பவம் செய்ய முயற்சித்த இயக்குனர்.. மறுத்த கேத்ரீன் தெரேசா.. அலசி ஆராய்ந்த பிரபல நடிகர்..

திருமணமாகாத நடிகர்கள்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் திருமணமாகாத நடிகர்கள் சிலர் உள்ளனர். நடிகர்கள் சிலம்பரசன், விஷால், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா போன்றவர்கள் இன்னும் திருமணமாகாமல் உள்ளனர். இதில் எஸ்ஜே சூர்யா 50 வயதுகளை கடந்துவிட்டதால், நான் எப்போதுமே முரட்டு சிங்கிள்தான் என்று நேரடியாக உறுதியாக தெரிவித்து விட்டார்.

ஆனால் சிலம்பரசன், விஷால், பிரேம்ஜி போன்றவர்களுக்கு இந்த கேள்விகள் எங்கு சென்றாலும் தொடர்கிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் சிலம்பரசன் தனது திருமணம் குறித்து பேசிய வீடியோ ஒன்றை நடிகர் பிரேம்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கல்யாணத்தை பத்தி கேப்பீங்க

இனி யாராச்சும் கல்யாணத்தை பத்தி கேப்பீங்க என கிண்டலாகவும் அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் நடிகர் சிம்புவிடம்,
ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கறீங்க என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: பீரியட்ஸ்க்கு முன்னாடி இதை முயற்சி பண்ணுங்க.. அப்புறம் பாருங்க.. அனு இம்மானுவேல் ஹாட் டிப்ஸ்..

ஏன் இன்னும் உயிரோடு இருக்கறே…

அதற்கு பதிலளித்த நடிகர் சிலம்பரசன், இப்ப வயசானவங்க கிழவங்க 50, 60 வயசுல செத்துடறாங்க. அப்போ அந்த வயசுல இருக்கறவங்க, ஏன் இன்னும் நீ உயிரோடு இருக்கறேன்னு நாம யாரையாச்சும் கேக்கிறோமா, எங்களை மட்டும் எதுக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையான்னு கேக்கறீங்க.

அவனவனுக்கு எப்போ டைம் வருதோ..

உன் வயசுல இருக்கறவங்க எல்லாம் போயிட்டாங்க, நீ என் இன்னும் இருக்கறேன்னா சொல்ல முடியும்? ஏண்டா டேய், அவனவனுக்கு எப்போ டைம் வருதோ, அப்போதாண்டா போக முடியும்.

அதே மாதிரி அவனவனுக்கு எப்போ டைம் வருதோ அப்பதாண்டா கல்யாணம் பண்ணிக்க முடியும், என்று செம்மையான ஒரு பதிலை சிரித்தபடி கூறியிருக்கிறார்.

இந்த பதிலை ரசிகர்கள் பலரும் ரசித்து, அவருக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version