ஆந்திர மாநிலத்தில் பிறந்த விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா 1970களில் ஒப்பனை கலைஞராக திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு நடிகர் வினு சக்கரவர்த்தி நடித்த வண்டிச்சக்கரம் படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தவர்.
கவர்ச்சிக்கன்னி சில்க் ஸ்மிதா..
ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா இல்லாத திரைப்படங்களை இல்லை என்று கூற கூடிய அளவிற்கு ஹீரோயினிகளுக்கு கிடைத்த அந்தஸ்து கவர்ச்சி கன்னியாக ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்த சில்க் ஸ்மிதாவிற்கு கிடைத்தது.
திரைப்படங்களில் நடிக்கக்கூடிய ஆரம்ப நாட்களில் நல்ல கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து இருக்கிறார். இவர் நடித்ததில் மிகவும் போலான கேரக்டரை செய்த திரைப்படமாக மூன்று முகம் திரைப்படம் உள்ளது என கூறலாம்.
இவர் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை செய்திருந்தாலும் கவர்ச்சியின் நடிகையாகவே முத்திரை குத்தப்பட்டார். இவரது குணச்சித்திர வேட நடிப்பை நீங்கள் அலைகள் ஓய்வதில்லை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குதம்மா போன்ற படங்களில் பக்காவான கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார்.
இந்நிலையில் 1980-களில் வெளி வந்த பல திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா இல்லாமல் இல்லை என்று கூறும் அளவுக்கு திரையுலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து பிரபலமான நபராக விளங்கினார்.
1989 ஆம் ஆண்டு வெளி வந்த லயனம் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கேரக்டர் ரோடு செய்து நல்ல பெயரை எடுத்தார். இந்த படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. மேலும் பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை திரைப்படம் மிகச்சிறந்த வெற்றியை இவருக்கு தந்தது.
இறப்புக்கு முன் வந்த தாடிக்காரர்..
இன்று வரை திரை உலகில் சில்க் ஸ்மிதா நடித்த படங்களையும் அவரையும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவு அனைவரது மனதிலும் பதிந்திருக்கும் இவரது இறப்புக்கு என்ன காரணம் என்பது இன்று வரை புரியாத புதிராகவும், அவிழ்க்க முடியாத முடுச்சாகவும் உள்ளது.
இந்நிலையில் சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்பு அவர் வாழ்வில் மர்மமான முறையில் வந்து போன தாடிக்காரர் யார் என்று தெரியுமா?
திரை உலகில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த இவருக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டிருந்ததை அன்றே வெளிப்படையாக பேசியவர். ஆந்திராவில் இருக்கும் ஏழை மக்களுக்கு பல்வேறு வகைகளில் பண உதவியை செய்து இருக்கிறார்.
குறிப்பாக பண்ணையார்களுக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கு நிதியை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவரது இறுதி வாழ்க்கையில் தாடிக்காராக டாக்டர் என்ற ஒரு நபர் வந்திருக்கிறார். அந்த டாக்டர் நபர் யார் என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே இருந்து வருகிறது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறந்து போன சில்க் ஸ்மிதாவின் உடலை யாருமே வாங்காமல் அனாதை பிணமாக இருந்த நிலையில் கடைசியாக தான் அவரது உறவினர்கள் சென்று அவரது உடலை வாங்கிக் கொண்டார்கள்.
மேலும் சில இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வரும் போதும் அது தற்கொலை அல்ல கொலை என்றும் சிலர் கூறி வருகிறார்கள். உயிரோடு இருக்கும் போதே பல மர்மங்களை தன்னுள் ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதா இறந்த பிறகும் அது போலவே பலவிதமான மர்மங்களை தன் பக்கம் வைத்திருக்கிறார்.