நடிகை சில்க் ஸ்மிதா ஆரம்ப காலத்தில் ஒப்பனை கலைஞராக திகழ்ந்ததை அடுத்து தமிழ் நடிகர் வினு சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக வாழ்ந்து வந்தார்.
நடிகை சில்க் ஸ்மிதா..
ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். எனினும் இவரது பூர்வீகம் தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் என்பது பலருக்கும் தெரியாது.
குடும்ப வறுமையின் காரணமாக திரையுலகுக்கு நடிக்க வந்த இவருக்கு சின்ன வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள். ஆங்கிலம் கற்றுக் கொடுத்ததே வினுசக்கரவர்த்தியின் மனைவி தான் என்பது கூடுதல் சிறப்பான தகவலாகும்.
திரை துறைக்குள் நுழைந்ததை அடுத்து சில்க் ஸ்மிதா மற்றொருவரிடம் நடனம் கற்றுக் கொண்டார். இதனை அடுத்து இணையைத் தேடி என்ற திரைப்படத்தின் மூலம் 1979-இல் மலையாள திரை உலகுக்கு அறிமுகமானார்.
மேலும் மூன்று முகம் திரைப்படத்தில் தன அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு அலைகள் ஓய்வதில்லை படத்தில் குணசித்திர நாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
எனினும் கவர்ச்சி நாயகியாக முத்திரை குத்தப்பட்ட இவர் லயனம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்லலாம்.
அத்தோடு பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் தனது காந்த கண்களால் ரசிகர்களை கவர்ந்தார் என சொல்லலாம்.
இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் போன் பண்ணாங்க..
இதனை அடுத்து தேவைக்கு மேல் பணமும், புகழும் கிடைத்ததை அடுத்து இவர் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அளவு உள்ளது என சொல்லலாம்.
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவரோடு இணைந்து பணி புரிந்த கவர்ச்சி நடிகை அனுராதா, சில்க் ஸ்மிதா குறித்து சில தகவல்களை வெளிப்படையாக சொல்லியதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல நடிகை வெளியிட்ட தகவல்..
அந்த பேட்டியில் அனுராதா பேசும் போது சிலுக் தனக்கு நெருங்கிய தோழி என்றும் அவர் இறப்பதற்கு முதல் நாள் இரவு தனக்கு போன் செய்ததோடு அனு கொஞ்சம் வீட்டுக்கு வரயா? என்று கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
அத்தோடு ஏதாவது எமர்ஜென்சினா சொல்லு உடனே வரேன் என்று சொன்ன சில்க் இல்ல.. ஒன்னும் இல்ல.. சும்மாதான்.. என்று கூறினார். அது மட்டுமல்லாமல் நாளைக்கு காலையில் சீக்கிரம் வந்து விடுவாயா? என்றும் கேட்டதாக சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து நான் சிலுக்கிடம் அபியை காலையில் எட்டரை மணிக்கு பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்படியே உன்னை பார்க்க வந்து விடுகிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.
மறுநாள் காலையில் என் கணவர் டிவியை பார்த்து ஷாக்காகி அனு, அனு என்று கத்தினார். இதை அடுத்து டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் அதுவும் எனது தோழி சில்க் இறப்பு குறித்து போட்டு இருந்ததை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை. இன்று வரை இதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்.
ஒரு சமயம் அவள் அழைத்த போது நான் சென்று இருந்தால் இந்த மரணம் நடந்திருக்காதா? என்று கூட சில சமயங்களில் யோசித்து இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.