பெற்ற தாயிடமே சில்க் ஸ்மிதா இதை செய்தார்.. மிகப்பெரிய தவறு.. உடம்பு கூசும் ரகசியம் உடைத்த கவர்ச்சி நடிகை..

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சில்க் ஸ்மிதாவின் நிஜப் பெயர் விஜயலட்சுமி. தனது வண்டிச்சக்கரம் படத்தில் அவரை நடிக்க வைத்த வினுசக்ரவர்த்தி, அவருக்கு சில்க் என்ற பெயர் வைத்தார். பிறகு அதுவே நிரந்தர பெயராக மாறிவிட்டது.

சில்க் ஸ்மிதா

கடந்த 1980களில் சில்க் ஸ்மிதாவின் ராஜ்ஜியத்தில் தமிழ் சினிமா இருந்தது என்று சொல்லலாம். இப்போது வரை சில்க் ஸ்மிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இமேஜ் குறையாமல் இருக்க காரணம், கண்களில் சாராய போதை ஏற்றும் அவரது கிளர்ச்சி தரும், கிளுகிளுப்பான நடிப்புதான்.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் நிறைய நடித்தார்.

மர்மமான முறையில்

ஆனால் கடைசியில் எப்படி இருந்தார் என்று தெரியாமல், மர்மமான முறையில் இறந்து போனார். அவரது மறைவுக்கான உண்மையான காரணம் இன்றுவரை தெரியவில்லை.

அந்த காலத்து கவர்ச்சி நடிகை ஜெயமாலினி, நடிகை சில்க் ஸ்மிதா குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சில்க் ஸ்மிதா மிக குறுகிய காலத்தில் பெயரும், புகழும், பணமும் நிறைய சம்பாதித்தவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களை எல்லாம் கண்டுக்கொள்ள மாட்டார். எங்களுடன் பேசவே மாட்டார்.

இதையும் படியுங்கள்: தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..

உயர்ந்த நிலையில்

ஒரு படத்தில் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளான நான், ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா மூன்று பேரும் நடித்திருந்தோம். அப்போதே சில்க் ஸ்மிதா டாப்பில் இருந்தார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த நிலையில் இருந்தவர் திடீரென தற்கொலை செய்துக்கொண்டது மிகவும் வருத்தமான விஷயம்.

பெற்ற தாயை

சில்க் ஸ்மிதா அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு, அது காதல். காதலிக்கலாம் தவறு இல்லை. ஆனால் அதற்கான பெற்ற தாயை, உடன்பிறந்த சகோதரனை ஒதுக்கி வைத்திருக்க கூடாது. அவர் தனது காதலருக்காக தாயை, சகோதரனை ஒதுக்கி வைத்தது மிகப்பெரிய தவறு.

இதையும் படியுங்கள்: ஒரே காரில் கமலும்.. சிம்ரனும்.. அப்புறம் கௌதமியே.. புயலை கிளப்பிய பிரபலம்..

ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்த அவர், தன் உறவினர்களை பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் நமது பணத்தை பாதி தின்றாலும், கொஞ்சமாவது நமக்கு மிச்சம் வைப்பார்கள்.

ரொம்பவே ஏமாற்றுவார்கள்

ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள், முக்கியமாக நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று தெரிந்துக்கொண்டால் ரொம்பவே ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் காதலரை நம்பி ஏமாந்தார் என்று கூறியிருக்கிறார் ஜெயமாலினி.

மிகப்பெரிய தவறு

காதலருக்காக பெற்ற தாயை சில்க் ஸ்மிதா ஒதுக்கி வைத்தார். அது மிகப்பெரிய தவறு. காதலருடன் இருப்பதற்காக இந்த தவறை செய்தார் என்று உடம்பு கூசும் ரகசியத்தை இந்த நேர்காணலில் உடைத்திருக்கிறார் கவர்ச்சி நடிகை ஜெயமாலினி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam