தமிழ் திரை உலகில் காதல் என்பது கண்மூடித்தனமாக நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளின் மத்தியில் ஏற்படுகின்ற விஷயமாக உள்ளது. அந்த வகையில் அந்தக் காலத்தில் நடிகை சில்க் ஸ்மிதா பிரபலமான நடிகை ஒருவரின் கணவரை காதலித்த விஷயத்தை அவர் முன்னே உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
அந்த பிரபல நடிகையின் கணவர் யார்? அந்த நடிகை யார்? என்ற விவரத்தை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சில்க் ஸ்மிதா கூறிய இந்த விஷயத்தை கேட்டு அந்த நடிகை என்ன சொன்னார் என்பதையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
உன் புருஷன் தான் என்னோட ஃபர்ஸ்ட் லவ்வர்..
சில்க் என்று சொன்னாலே துள்ளாத மனமும் துள்ளும் என்று சொல்லக்கூடிய அளவு பெரும்பாலான இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரைக் கொண்டாடாத இளைஞர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.
படங்களில் அத்திரிபுத்திரி வேடங்களில் நடித்து அதிக அளவு கவர்ச்சியை காட்டி அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகை சில்க் ஸ்மிதா ரியல் லைஃபில் குடும்ப பெண்ணாக வாழவே விரும்பியவர்.
எனினும் திரை துறையில் இவருக்கு என்று அந்த மாதிரியான முத்திரையை குத்தி விட்டதை அடுத்து தகுந்த கதாபாத்திரங்கள் அமையாததால்,மீறி அப்படி அமைந்தாலும் அவரை அந்த கேரக்டர்கள் பார்க்க விரும்பாத ரசிகர்கள் கவர்ச்சியாகவே பார்க்க விரும்பியதை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டார்.
அப்படிப்பட்ட இவர் உருகி உருகி இசை அமைப்பாளர் மகன் ஒருவரை காதலித்து இருக்கிறார். என்ன செய்ய விதிவசத்தால் அந்த இசையமைப்பாளர் மகனை ஒரு பிரபல நடிகை திருமணம் செய்து கொண்டார்.
அந்த நடிகை இடமே விஷயத்தை உடைத்த சில்க்..
இதை அடுத்து அந்த பிரபல நடிகை திருமணம் செய்து கொண்ட இசை அமைப்பாளர் மகனைத்தான் தான் காதலித்ததாக அந்த நடிகை இடமே விசயத்தை போட்டு உடைத்து இருக்கிறார் சில்க்.
இதனை அடுத்து இவரது ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று சொன்னால் நீங்கள் வியப்பின் உச்சத்திற்கு சென்று விடுவீர்கள். சில்க் ஸ்மிதா சொன்னதை அப்படியே கேட்டுக் கொண்டிருந்த அந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா மீது எந்தவித கோபமும் கொள்ளவில்லை.
மேலும் திரையில் பார்க்கக்கூடிய சில்க் ஸ்மிதாவைப் போல அவள் ரியல் லைஃபில் இல்லை. மிகச்சிறந்த நட்பு உள்ளம் கொண்டவர் என்று அவரை பல வகையில் பாராட்டி பேசியதோடு என் கணவரை அவர் காதலித்திருந்தால் என்ன இப்போது வேண்டுமென்றால் விட்டுக் கொடுக்கலாமா என்று கேட்டிருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பாராத சில்க் அந்த நடிகையோடு கடைசி வரை நட்பு பாராட்டி இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் நல்ல முறையில் வாழ வேண்டும் என மனதார நினைத்திருக்கிறார்.
அந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படத்திலும் களைகட்டி நடித்த அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை சுலக்ஷனா. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் படு பிஸியாக நடித்து வந்த நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தூறல் நின்னுபோச்சு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் நடிகர் பாக்யராஜுடன் நடித்து அனைவரது உள்ளத்தையும் கவர்ந்த இவர் உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்திருக்கிறார்.
இவர் பழம்பெரும் இசையமைப்பாளரான எம்எஸ் விஸ்வநாதனின் மருமகள் என்பது பலருக்கும் தெரியாது. இவர் தனது பதினெட்டாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அதுவும் இசை ஜாம்பவானான எம் எஸ் விஸ்வநாதனின் மூத்த மகன் மீது காதல் கொண்டு தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
அந்த காதல் கணவரை தான் ஆரம்பத்தில் சில்க் ஸ்மிதா தன்னிடம் காதலித்ததாக கூறியதை அடுத்து வேண்டுமென்றால் இப்போது வைத்துக் கொள்ளுங்கள் என்று சிரித்தபடி கூறி இருக்கிறார். இதை அடுத்து இவரது ரியாக்ஷனை பார்த்து சில்க் ஸ்மிதா சிரித்த வண்ணம் சென்றுவிட்டார் என பேட்டி ஒன்றில் முன்பு கூறியிருக்கிறார்.