இப்படி செஞ்சா உடம்பு மோசமாகிடும்.. சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமை..

தமிழ் சினிமாவில் சிலருக்கு இருந்தாலும், மறைந்தாலும் எப்போதும் அவர்களது புகழ் மறைவதில்லை. மங்குவதில்லை. அவர்கள் இருந்த போது இருந்த வரவேற்பும், கிடைத்த அங்கீகாரமும் இல்லா போதும் கிடைக்கிறது.

அந்த வகையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிகராக, தமிழக முதல்வராக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.

அதே போல் ஜெயலலிதாவை யாரும் மறந்துவிடவில்லை. அவர் புகழ் இன்னும் மக்கள் மத்தியில் விளங்குகிறது. ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்கின்றனர்.

சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் புகழ், என்றென்றும் மாறாமல் இருக்கும். அதற்கு காரணம்

சினிமாவில் மட்டுமல்ல, இன்னும் இன்னும் எத்தனையோ துறைகளில் சாதித்தவர்களின் புகழ், மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்களின் புகழ் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

சில்க் ஸ்மிதா

அதே போல் தமிழ் சினிமாவில் விஜயலட்சுமி என்ற பெயருடன் நுழைந்தவர், பின்னாளில் ரசிகர்களின் சில்க் ஸ்மிதா என கனவு கன்னியாக மாறினார்.

நடிகர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சாராயம் விற்கும் சில்க் கேரக்டரில் நடித்த அவருக்கு, பின் அதுவே நிஜப் பெயராகி போனது.

இதையும் படியுங்கள்:  கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

கவர்ச்சி நாயகி

சில்க் ஸ்மிதாவின் 17 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பலமொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து, ரசிகர்களின் கனவு கன்னியாக சில்க் ஸ்மிதா வாழ்ந்தார்.

அப்போதும் அலைகள் ஓய்வதில்லை படத்தில், பாரதிராஜா அவருக்கு தியாகராஜன் மனைவியாக நடிக்க வைத்து, அம்சமான நடிப்பாற்றல் மிக்கவர் சில்க் ஸ்மிதா என்பதை சொல்லி இருந்தார்.

எம்ஜிஆர் அட்வைஸ்

அந்த படத்தை பார்த்த எம்ஜிஆர் கூட, இனிமேல் இதுபோன்ற நல்ல கேரக்டர்களில் நடி, அதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்லது என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, ஒரு நேர்காணலில் சில்க் ஸ்மிதா குறித்து பேசியிருக்கிறார். அப்போது செய்யாறு பாலு கூறுகையில், சிலக் ஸ்மிதா பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது, ஒரே நாளில் 6 படங்களில் எல்லாம் நடித்துள்ளார்.

அந்தளவுக்கு அவருக்கு நேரமே இல்லாமல், படங்களில் கால்ஷீட் அடுத்தடுத்து இருந்துக்கொண்டே இருக்கும். அந்தளவுக்கு அவரை புக் செய்துக்கொண்டே இருப்பார்கள்.

தூங்க விட மாட்டேங்கறாங்க…

இதுகுறித்து ஒருமுறை டிஸ்கோ சாந்தியிடம் பேசிய சில்க் ஸ்மிதா, என்னை தூங்க கூட விட மாட்டேங்கறாங்க. தூக்கமே மறந்துவிடும் போல இருக்கு, என்று வேதனையாக கூறியிருக்கிறார்.

அதற்கு அவருக்கு ஆறுதல் சொன்ன டிஸ்கோ சாந்தி, இப்படியே போனால் உங்க உடம்பு ரொம்ப மோசமாயிடும். தயவு செய்து கேட்கிற எல்லாருக்கும் கால்ஷீட் கொடுக்காதீங்க என்று அட்வைஸ் செய்திருக்கிறார், என்று செய்யாறு பாலு அதில் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தொடர்ந்து சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்ததால் தூங்கக் கூட முடியாமல் சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமையாக அது இருந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version