” வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்கள் கருப்பா இருக்கிறதா..!” டோன்ட் ஓரி எந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணா பளிச்சுன்னு ஜொலிக்கும்..!!

நமது வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள், பூஜை சாமான்கள் அனைத்தும் புதுசு போல மின்ன வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குறிப்பாக இந்த வெள்ளி பொருட்களை நாம் வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்துவிட்டால், அதன் நிறம் மங்கி கருப்பாக மாறிவிடும்.

 அப்படி கருமை நிறத்தில் இருக்கக்கூடிய வெள்ளிப் பொருட்களுக்கு மெருகு போடாமல் எப்படி நீங்கள் மினுமினுக்க வைக்கலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

👍நாம் பல் தேய்க்க பயன்படுத்தும் கோல்கேட் டூத் பவுடர்  எடுத்துக்கொண்டு அதை பிரஸ்ஸின் மூலம் வெள்ளி பொருட்களில் நன்றாக வைத்து தேய்க்கும் போது  கருமை நிறமாக இருக்கும் வெள்ளி அதன் நிறத்தை மாற்றி வெள்ளை வெளேர் என்று காட்சி அளிக்கும். இதற்கு நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள் பவுடரை மட்டும் பயன்படுத்துங்கள்.

👍எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை கொண்டு வெள்ளிப் பொருட்களில் படிந்திருக்கும் கருமையை ஐந்தே நிமிடத்தில் நீக்கிவிடலாம். இந்த இரண்டு கலவையும் நன்றாக கலந்து கொண்டு வெள்ளி பொருட்களில் காட்டன் துணியைக் கொண்டு இந்த கரைசலைத் தொட்டு நன்கு தேய்க்கும் போது வெள்ளி நிச்சயம் புதிது போல பளபளக்கும்.

வீட்டில் நாம் நெற்றியில் வைக்கும் திருநீரை வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பூஜை சாமான்களின் மீது தூவி காட்டன் துணியை கொண்டு அழுத்தி தேய்க்கும் போது அதில் இருக்கும் கருப்பு நிறம் மாறி பளபளவென நீங்கள் பார்ப்பதற்கு புதிய வெள்ளியைப் போல காட்சி அளிக்கும்.

👍 இது போலவே எலுமிச்சை பழம் சிறிதளவு பிழிந்து கொண்டு அதனோடு உப்பை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இந்த கலவையை சூடு செய்து கொள்ள வேண்டு.ம் பின் சூடான அந்த வெந்நீரில் வெள்ளிப்பொருட்களை போட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இதனை அடுத்து காட்டன் துணியால் வெள்ளியை துடைக்க வெள்ளி பளபளவென்று ஜொலிக்கும்.

👍வெதுவெதுப்பான நீரில் கால் கப் வெள்ளை வினிகர் சேர்த்து அதனோடு பேக்கிங் சோடாவையும் கலக்கி விட வேண்டும் அதன் பின் இந்த தண்ணீரில் வெள்ளி பொருட்களை போட்டு வைப்பதன் மூலம் டெல்லியில் இருக்கும் அழுக்கு கருப்பு நிறம் மறைந்து புதிய வெள்ளி போல் மாறிவிடும்.

மேலே சொல்லப்பட்ட டிப்ஸ்களை ஃபாலோ செய்து நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்களை புதிதாக மாற்றி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று விடுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …