சிம்புவின் வாழ்வை சீரழித்த பெண்கள்.. ஏழு கழுதை வயசாகியும் அது நடக்காத மர்மம் என்ன..?

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் என்கின்ற சிம்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தனது தந்தையின் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானதை அடுத்து தமிழ் திரை உலகில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

சிம்புவின் வாழ்க்கையை சீரழித்த பெண்கள்..

சினிமாவில் வளர்ந்து வரும் போது உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக மாறி அனைவரையும் கவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சிம்புவின் வாழ்க்கையை சில பெண்கள் சீரழித்ததை அடுத்து திரையுலக வாழ்க்கை அவருக்கு சரிய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் மிக நல்ல வெற்றிகளை இவரது படங்கள் கொடுத்திருந்தாலும் இடையில் திரை உலகில் எங்கு இருக்கிறார் என்று கேட்கக் கூடிய அளவு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்துவிட்டார்.

இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையில் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பேச்சும் அடிபட்டது. 

ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பது போல் சிம்புவை விடுத்து பிரபல நடிகர் தனுஷை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யாவின் திருமணம் மூலம் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான சிம்பு மீடியாக்களில் பல்வேறு வகையில் குழம்பித் தள்ளி இருக்கிறார். இதனை அடுத்து நயன்தாராவின் மீது காதல் கொண்டார். 

இதனை அடுத்து இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட முத்த காட்சிகள் அனைத்தும் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் சூடாகப் பரவியது.

மேலும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நயன்தாரா காதலை பிரேக் அப் செய்து தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

ஏழு கழுதை வயசாகயும்..

இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் சிம்பு இரண்டு காதல் தோல்விகளால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி சினிமாவில் கவனத்தை செலுத்தாமல் இருந்தார்.

மேலும் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட புதிய நடிகையான ஹன்சிகா மோத்வானி சிம்புவை தனது காதல் வலையில் வீழ்த்தினார். இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்த சிம்பு விரைவில் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வழக்கம் போல பரவியது.

அட என்ன கொடுமை என்று சொல்லக்கூடிய அளவு நடிகை ஹன்சிகாவும் சிம்பு உடன் கொண்டிருந்த காதலை முறித்துக் கொண்டு வேறொருவருடன் திருமணம் நடந்து முடிந்து இருந்த நபரை இவர் திருமணம் செய்து கொண்டார்.

அது நடக்காத மர்மம் என்ன?

பிறகு என்ன காதல் தோல்வியால் நொறுங்கிப் போன சிம்பு தனக்கு திருமணமே வேண்டாம் என்று விரத்தியில்  சொல்லி வருவதாக திரையுலக வட்டாரங்களில் இன்றும் பேச்சுக்கள் புகைத்த வண்ணம் உள்ளது.

மேலும் பிரசாந்த் போல் பணத்திற்கு ஆசைப்பட்டு சிக்கி சீரழியாமல் இருந்தால் பரவாயில்லை என்று சிம்புவின் நலம் விரும்பிகள் சொல்லி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அத்தோடு சிம்புவின் வாழ்க்கையை சீரழித்த பெண்கள் இதனால் தான் கழுதை வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை என்று அனைவரும் சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version