வேட்டை ஆரம்பித்தது…செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கிய சிம்பு… இனி காட்டில் மழை!

இயக்குனர் டி ராஜேந்திரன் அவர்களின் மகன் சிம்பு சிறந்த நடிகர், நடன கலைஞர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முக திறமைகளை கொண்டவர்.தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் நாயகனாக திரையுலகில் ஜொலித்தவர்.

சிவாஜி கணேசன் – எம்ஜிஆர், ரஜினி -கமல், அஜித்- விஜய் போன்ற நட்சத்திரங்கள் போலவே தனுஷ்- சிம்பு என்னும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஆனால் ஒரு சில தவறான கதை தேர்வுகளால் வெள்ளி திரையில் சில காலம் இவரால் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை.

சிறிது கால இடைவேளைக்கு பிறகு மீண்டும் இவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் கருத்துக்களையும் பெற்றது.

தற்போது தனது உடல் எடையை எல்லாம் குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.  இவர் நடித்த வெந்து தணிந்த காடு என்ற திரைப்படமும் கமர்சியலாக நல்ல ஹிட் கொடுத்துள்ளது.

அதனால் மீண்டும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்கள். அதனால் அதிரடியாக இவரது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார்.

படு பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் இவரது கையில் தற்போது பத்து தல, மற்றும் பெயரிடப்படாத சில திரைப்படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் நடித்த வாலு என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் சுந்தர் சிம்புவை அணுகி சிலர் ரீமிக்ஸ் திரைப்படங்களின் கதைகளை அவரிடம் கூறி திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது.

அதற்கு சிம்பு ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியதாக தகவல்கள் இணையத்தில் பரவியது. இதனால் இயக்குனர் சிலர் அதிர்ச்சியடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சிம்பு என ரீமிக்ஸ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றால் அவரது கதை தேர்வுகள் மற்றும் அவரது படங்கள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …