கலக்கலாக முடிந்த சிம்பு -வின் பத்து தல முதல் கட்ட படப்பிடிப்பு!

சமீபத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு மிக நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து சிம்பு பத்து தல கொரோனா குமார் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 சில்லுனு ஒரு காதல் ,நெடுஞ்சாலை படத்தை இயக்கிய ஒபலி என் கிருஷ்ணா தான் இந்த பத்துதல படத்தை இயக்கி வருகிறார்.

 மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தெரிகிறது.

 இசை ஏ ஆர் ரகுமான் என தெரிகிறது இதன் மூலம் இந்தப் படத்தில் பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 இந்த படமானது 2017ஆம் ஆண்டில் வெளிவந்த முஃப்தி  கன்னடத் திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம் தமிழில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு தனது நடிப்புத் திறனால் மாஸ் கிளப்பியிருக்கிறார்.

 சமீபத்தில் 10 தல படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்பஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை அதிக அளவு  ஈர்த்து உள்ளதால் படம் மாஸ் வெற்றியை மீண்டும் சிம்புவுக்கு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது மேலும் ரசிகர்களுடன் சிம்பு இருப்பது போல இருக்கக்கூடிய புகைப்படங்களும் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணன் சிம்புவுடன் பேசுவது போன்று இருக்கும் அந்த புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகியுள்ளது.

 முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. பின்பு தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அத்தோடு ஒரு புகைப்படத்தையும் இணைத்திருப்பது மேலும் இந்தப் படத்தைப் பற்றிய பேச்சை வைரல் ஆகி விட்டது.

 இந்தப் படமானது வரும் டிசம்பர் 14ஆம் தேதி பிறகு வெளிவரும் என்ற இன்பகரமான செய்தியை தற்போது ரசிகர்கள் வெகு விமர்சியாக தீபாவளி பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …