சிம்புவின் பத்து தல இப்ப இல்லை… மார்ச் மாதத்திற்கு தள்ளி போகும் ரிலீஸ்..!!

 லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு  ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிம்பு என்கிற சிலம்பரசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை உலக பயணத்தை ஆரம்பித்தவர்.இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார்.

 இவரின் திரை உலக வாழ்க்கையில் இடையில் பல சர்ச்சைகளையும், சரிவுகளையும் சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் நான் இருக்கிறேன் என்ற நிலையை சொல்லிவிட்டார்.

 அதன் பிறகு வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற வசனங்களுக்கு ஏற்றபடி கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துக் கொண்டு, இனி சிம்புவால் திரைப்படத்தில் நடிக்கவே முடியாது என்று பேசியவர்களின் வாயை அடக்கும் விதத்தில் விஸ்வரூப வெற்றியைத் தந்தார். இதனை அடுத்து இவரது ரசிகர்கள் இவரை தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

 அந்த வரிசையில் தற்போது சிம்பு நடித்துவரும் படத்தின் பெயர் தான் பத்து தல . இந்தப் படமானது கன்னடத்தில் வெளிவந்த முப்தி  படத்தின் ரீமேக் தான்.

 மேலும் இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். சிம்புவுடன் இணைந்த இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர்  முக்கிய ரோல்களை ஏற்று நடிக்கிறார்கள். இந்தக் கதை ஒரு கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

 மேலும் படத்தின் கிளிம்பஸ் காட்சிகள் சிம்புவின் பிறந்தநாள் தினத்தன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் டிசம்பர் 14ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்று வரை முடிவடையாத நிலையில் இந்த படம் மார்ச் மாதத்திற்கு மேல் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதற்கு காரணம் பிப்ரவரி மாதத்தில் தனுஷின் வாத்தி உட்பட்ட பல படங்கள் வெளி வருவதால் பத்து தல படத்தை மார்ச் மாதம் வெளியிட்டால் போதும் என்று எந்த படக்குழு முடிவு செய்துவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …