லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் குரல் இனி ஹிந்தியிலும் ஒலிக்கும்….!

 டி ராஜேந்திரனின் மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் வரிசையில் தற்போது இருக்கிறார்.

 இடையில் இவருக்கு ஏற்பட்ட சறுக்கல் காரணமாக இனி சினிமாத்துறையில் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தவர் களின் மத்தியில் விஸ்வரூபமாக வெந்து தணிந்தது காடு மூலம் தனது ரீ என்ட்ரியை கொடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு.

 பன்முகத் திறமையாளர் என்று போற்றக் கூடிய அளவு சிம்புவிடம் நிறைய நிறைய திறமைகள் உள்ளது அதில் அவருக்கு பாடக்கூடிய ஆற்றலும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் இவருடைய குரலால் அனைவரையும் வசீகரிக்க கூடிய தன்மை இவருக்கு உள்ளது.

 இதை அடுத்து இவரது நண்பரும் நடிகருமான மகத் ஹிந்தியில் நடிக்கவுள்ள படம் தான் டபுள் எக்ஸல். இந்த படத்தில் இவருடன் சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரோஷி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

 இந்தப் படத்தில் நம் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தாலி தாலி என்ற பாடலைப் பாடி பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாக உள்ளார். இதை பற்றி கேள்விப்பட்ட செய்தியாளர்கள் சிம்புவிடம் இது நிமித்தமான கேள்வியைக் கேட்டபோது அவர் எனது நண்பர் மஹத்திற்காக பாலிவுட்டில் தான் இந்தப் பாடலை பாடி இருப்பதாக கூறினார்.

 மேலும் இந்தப் பாடலானது லூசு பெண்ணே லூசு பெண்ணே பாடலைப் போலவே அனைவருக்கும் பிடித்த கூடிய பாடலாக இருக்கும் என நம்புவதாக கூறியிருக்கிறார்.

 மிக விரைவில் வெளிவரக்கூடிய என்ற பாடலை கேட்பதற்காக இப்போது சிம்பு ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பின்னால் மிகப் பெரிய மழை தான்.

இதனைத் தொடர்ந்து இவர் தனக்கு வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.மேலும் திரைத்துறையை சார்ந்த நண்பர்களும் மற்றவர்களும் இவருக்கு இந்தப் பாடல் வெற்றியடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …