சிம்புவுக்கு இந்த முன்னணி நடிகரின் மகளுடன் திருமணமா..? காட்டு தீயாய் பரவும் தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருப்பவரும் ஆன நடிகர் சிம்பு முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் திரைப்படங்களில் அறிமுகமானார்.

இவரது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் குழந்தைகள் நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரத் துவங்கினார்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு:

சிம்பு குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதில் கவர்ந்தவர். நிச்சயம் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அப்போதே பேசப்பட்டது போலே இன்று நட்சத்திர நடிகையாக உயர்ந்திருக்கிறார்.

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் நடிக்க தொடங்கி

பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன்,சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, வானம், ஒஸ்தி, போடா போடி,

செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜா தான் வருவேன், மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட தற்போது நடிகர் சிம்புவுக்கு 41 வயது ஆகிவிட்டது. இவருக்கு பல வருடங்களாக திருமணம் குறித்த செய்திகளும் திருமணம் குறித்த வதந்திகளும் வெளியான வண்ணம் தான் இருந்து வருகிறது.

நயன்தாராவுடன் லிப்லாக், கழட்டிவிட ஹன்சிகா:

இவர் பிரபல நடிகைகளான நயன்தாரா மற்றும் ஹன்சிகா இவர்களுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.

குறிப்பாக ஹன்சிகாவை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக முடிவில் இருந்தார்.

ஆனால் சிம்பு சரியான பிளேபாய் என ஹன்சிகாவின் தோழிகள் கூறியதால் சிம்புவை விட்டு பிரிந்து விலகிவிட்டார்.

அவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். ஆனால் நடிகர் சிம்பு இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதனிடையே அவ்வப்போது சிம்புவை குறித்த திருமணம் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. டி ராஜேந்திரன் தனது மகன் சிம்புவுக்கு விரைவில்,

பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என பல பேட்டிகளில் கூறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் அது தற்போது வரை நடக்கவே இல்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் சிம்புவின் திருமணம் குறித்த செய்தி ஒன்று வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் உடன் திருமணம்:

இதில் மணப்பெண் யார் என்பதுதான் ஆச்சரியத்திற்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆம் நடிகை கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனை தான் சிம்பு,

விரைவில் திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது வெறும் பொய்யான தகவல்என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

காரணம் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் சாந்தனு ஹசாரிக்கா என்ற தனது காதலனுடன் தற்போது லிவிங் லைஃபில் வாழ்ந்து வருகிறார்.

அப்படி இருக்கும்போது சிம்பு எப்படி திருமணம் செய்வார் என பலர் கேள்வி எழுப்பி இது பொய்யான தகவல் என ஆணித்தரமாக கூறி வருகிறார்கள்.

எனவே இந்த திருமண வதந்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்து, இரு தரப்பில் இருந்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version