என்னது..! இந்த நடிகரின் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா..? தீயாய் பரவும் தகவல்..!

பன்முகத் திறமையை கொண்ட இயக்குனர் டி ஆர் ராஜேந்திரனின் மூத்த மகன் சிலம்பரசன் என்கின்ற சிம்பு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரும் இவர் தந்தையைப் போல பல்வேறு திறமைகளை கொண்டு இருப்பதால் தான் இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.

தற்போது 40 வயதை கடந்துவிட்ட நிலையிலும் முரட்டு சிங்கிளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை அடுத்து இவருக்கு விரைவில் திருமணம் என்று ஊடகங்களில் அதிக அளவு செய்திகள் கசிந்து வருகிறது.

நடிகர் சிம்பு..

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானதை அடுத்து வளர்ந்து பெரிய ஹீரோவாக மாறிய இவர் பல படங்களில் தனது அற்புத நடிப்பை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தீய நட்பின் மூலம் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு குறித்த நேரத்தில் வராமல் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று இருந்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வருவது குறைந்தது.

இந்நிலையில் பலரும் சிம்புவின் திரை வாழ்க்கை முற்றுப் பெற்று விட்டது என்றே சொல்லலாம் என்று பல்வேறு கருத்துகளை முன் வைத்து பேசி வரக்கூடிய சூழ்நிலையில் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. என்ற வசனத்திற்கு ஏற்ப அவர் மாநாடு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அத்தோடு நயன்தாரா திரிஷா என பல முக்கிய நடிகைகளோடு இணைத்து பேசப்பட்ட இவர் அவர்களைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விஷயங்கள் புகைந்தது.

இந்த நடிகரின் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா?..

இந்த படத்தை தொடர்ந்து திரைப்படத்தின் மூலம் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக பத்து தல படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த படத்தையும் பக்காவாக நடித்து திரை வட்டாரத்தில் மிகச் சிறந்த பெயரை பெற்று விட்டார்.

இதற்கிடையில் சிம்புவின் திருமணம் பற்றி வகை வகையான கருத்துக்கள் வெளி வந்த போதிலும் தற்போது இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் அதுவும் அக்கட தேசத்து முன்னணி நடிகரின் மகளை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற பேச்சுக்கள் வெகுவாக எழுந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் மணப்பெண் மருத்துவராக இருப்பதாகவும் அதிக அளவு வரதட்சனை கொடுத்து நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தினுசு தினுசாக செய்திகள் இணையங்களில் தீயாய் பரவி வருகிறது.

தீயாய் பரவும் தகவல்..

எனினும் இந்த தகவல் உண்மையானதா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படாத நிலையில் ரசிகர்களின் மனதில் விரைவில் இவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து விரைவில் சிம்பு தெலுங்கு நடிகரின் மகளை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விஷயம் காட்டுத் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்கள் அனைவரும் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் நாளொன்று போனால் வயதொன்று போய்விடும். எனவே விரைவில் திருமணம் பற்றிய விஷயத்தை பகிர வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version