பிரபல நடிகரின் மகளை மணக்கும் நடிகர் சிம்பு..? வரதட்சணை மட்டும் எவ்வளவு தெரியுமா..?

திரை உலகில் பன்முகத் திறமையை கொண்ட டி ராஜேந்திரனின் மகனாகிய சிலம்பரசன் என்கிற சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

நடிகர் சிம்புவும் தனது அப்பாவை போல பன்முக திறமையோடு விளங்குபவர். பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர்.

நடிகர் சிம்பு..

சிம்புவின் மாசான நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரது திரைப்படத்தை காண எப்போதும் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள்.

அந்த வகையில் அண்மையில் வெளி வந்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை தந்ததோடு சிம்புவின் திரை உலக வாழ்க்கைக்கு பக்க பலமாக நின்றது.

ஏற்கனவே இந்த படத்திற்கு முன்பு நடித்திருந்த மாநாடு திரைப்படமும் ஒரு மாஸ் வெற்றியை தந்தது அடுத்து பத்து தல படத்திலும் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அசர வைத்தார்.

சினிமாவில் நடிக்கும் போதே பல்வேறு நடிகைகளோடு இணைத்து பேசப்பட்ட கிசுகிசுக்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. 

மேலும் மதுவுக்கு அடிமையாக இருந்த இவர் பெண்கள் விஷயத்திலும் வீக்கான பேர்வழி என்ற சாயம் பூசப்பட்டது.

இதனை அடுத்து இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வரும் இவர் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

பிரபல நடிகரின் மகளை மணக்கிறாரா..

இந்த சூழ்நிலையில் சிலம்பரசனின் அப்பா சிம்புவுக்கு பெண் பார்க்கக்கூடிய விஷயங்கள் பலவும் பல ஆண்டுகளாக இணையங்களில் வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

ஆனால் இன்று வரை எந்த ஒரு  பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சிம்பு பற்றிய அண்மை தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதற்குக் காரணம் நடிகர் சிம்பு பிரபல தெலுங்கு நடிகரின் மகள் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரபரப்பாக இணையங்களில் வெளி வந்துள்ளது.

வரதட்சணை மட்டும் எவ்வளவு தெரியுமா?

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லப்படும் மணப்பெண் மருத்துவர் என்பது மட்டுமல்லாமல் சிம்புவின் தீவிர ரசிகை என்ற தகவல் ரசிகர்களின் மத்தியில் காட்டு தீயாய் பரவி விட்டது.

இதனை அடுத்து சிம்புவுக்கும் மருத்துவரான பெண்ணிற்கும் விரைவில் திருமணம் என்று சொல்லப்படும் வேளையில் சிம்புவை திருமணம் செய்து கொள்ள சுமார் 1000 கோடியை வரதட்சணையாக கொடுக்க இருப்பதாக சொல்ல செய்தி தான் அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்து உள்ளது.

மேலும் இந்த தகவல் தான் தற்போது அக்கட தேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது வரை இரு தரப்பில் இருந்தும் எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலும் இது குறித்து வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனினும் அதிகாரப்பூர்வமான விஷயமாக இல்லாத இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பேசி பேசும் பொருளாக மாற்றிவிட்டார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் சிம்பு விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும். ஏனென்றால் நாளொன்று போனால் வயதொன்று போகும் என்பதை அக்கறையோடு சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து தமிழக மக்களின் இல்லங்களில் பிள்ளையாகவே பார்க்கப்படும் சிம்புவின் திருமணத்தை குறித்து இல்லத்தரசிகளும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version