“துணிகளில் கரையா..!” நீங்கவில்லை என்ற கவலை வேண்டாம் சிம்பிளாக இத ஃபாலோ செய்தா துணிக பளபளக்கும்..!

நீங்கள் புதிதாக வாங்கிய துணிகளில் கரைகள் படிந்து விட்டதா? அட எல்லா டெக்னிக்கையும் ஃபாலோ பண்ணியும் எந்த கரை போகவில்லை என்ற கவலையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும்.

 உங்கள் துணிகளில் இருக்கும் கரைகள் எங்கே என்று கேட்கக் கூடிய அளவுக்கு பள பளப்பாக புது துணி போல மாறிவிடும்.

துணிகளில் உள்ள கறைகள் நீங்க

👍பேக்கிங் சோடா உடன் வினிகரை சேர்த்து கரை உள்ள துணியில் நன்கு தேய்த்து அப்படியே ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இதனை அடுத்து மீண்டும் அந்த துணியை எடுத்து கரை உள்ள பகுதியில் பிரஷை போட்டு லேசாக தேய்த்தாலே கரை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

👍துணிமணிகளில் கரை இருக்கும் பட்சத்தில் குறிப்பாக மஞ்சள் நிற அழுக்கு கரை இருந்தால் அதை போக்குவதற்காக எலுமிச்சம் பழச்சாறினை அந்த பகுதியில் ஊற்றி நன்கு தேய்த்து பின் ஊறவைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து இதனை வாஷிங் மிஷினில் எப்போதும் போல் போட்டு துவைத்து விட்டால் அந்த மஞ்சள் நிற கரை இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்.

👍மேலும் கடினமான கறைகளாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தரை கிளீனர் ஆக பயன்படுத்தும் லைசாலை சிறிதளவு அந்த துணியில் ஊற்றி ஊறவைத்து விடுங்கள். பிறகு டிடர்ஜென்ட் கலவையால் தேய்த்து நன்கு அலசி அரை மணி நேரம் கழித்து இதனை வாஷிங் மிஷினில் போட்டு எப்போதும் போல் துவைத்து விட்டால் கரை எளிதில் நீங்கிவிடும்.

👍துணிகளில் இருக்கக்கூடிய காய்கறி கரைகளை  எளிதில் நீக்க வேண்டும் என்றால் நீங்கள் சிறிதளவு சோடா காரம் எலுமிச்சம் பழம் இவை இரண்டையும் துணியில் நன்கு தேய்த்து கால் மணி நேரம் நீரில் ஊற விட வேண்டும். பிறகு இதனை எடுத்து பிரஷ் இன் மூலம் நன்கு தேய்ப்பதால் அந்த கரை எளிதில் நீங்கிவிடும்.

 மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்வதோடு மட்டுமல்லாமல் நீங்கள் துவைத்த துணிகளை வெயிலில் உலர்த்துவதின் மூலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து துணிகள் தப்பித்துக் கொள்ளும். குறிப்பாக இளம் வெயிலில் உலர்த்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …