“கொளுத்தும் வெயிலுக்கு தரை-யை இப்படி துடையுங்க..!” – ஜில்லுனு இருக்கும்..!

கோடை வெயில் தாங்காமல் நமது வீட்டு தரைகளும் சூடாகவே இருக்கும். கீழே உட்கார்ந்தால் சூடு நம்மை எழுந்து விடு என்று சொல்லும் அளவிற்கு அதிக அளவு வெப்பத்தின் தாக்கம் காரணத்தால் கடுமையான சூட்டில் தரை இருக்கும்.

அது மட்டுமல்லாமல் வெயில் காலம் வந்து விட்டாலே, மாம்பழ வாசனைக்கும், பலாப்பழ வாசனைக்கும் வீடு நிறைய ஈக்களும் எறும்புகளும் மொய்ப்பது சகஜமான ஒன்றுதான்.

Floor cleaning

இந்த வெப்பமான கோடை காலத்தில் உங்கள் வீட்டு தரை சூடாக இல்லாமல் துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் தரையை துடைக்க எப்போதும் சில  பீளோர் கிளீனரை பயன்படுத்துவீர்கள். இனி அப்படி ப்ளோர் கிளீனரை பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் வேப்பிலை சாறு, சூடம் மூன்று இவற்றை நன்கு அரைத்து அதன் சாறை நீங்கள் யூஸ் பண்ணும் கிளீனர் உடன் கலந்து யூஸ் செய்து பாருங்கள்.

 இப்படி செய்வதின் மூலம் உங்கள் வீட்டு தரை குளிர்ச்சியோடு இருப்பது மட்டுமல்லாமல் எறும்பு மற்றும் ஈக்களின் தொல்லை இல்லாமல் இருக்கும்.

Floor cleaning

அதுபோல ரூம் ஸ்ப்ரே அடித்தது போல் மணக்க வேண்டும் என்றால் புதினாச்சாறை சிறிதளவு நீங்கள் பயன்படுத்தும் ப்ளோர் கிளீனர் உடன் கலந்து பயன்படுத்தி பாருங்கள். உங்கள் வீடு நறுமணமாக இருக்கும்.

 மேலும் இந்த மனம் எந்தவிதமான கேடுகளையும் உங்களுக்கு ஏற்படுத்தாது. உங்களையும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்வதற்கு உதவி செய்யும்.

Floor cleaning

ப்ளோர் கிளீனரே பயன்படுத்தாமல் நீங்கள் வேப்பிலை சாறு, கல் உப்பு, கற்பூரம், மஞ்சள் தூள் இவற்றை போட்டு வாரத்தில் இரண்டு முறை உங்கள் வீட்டை துடைத்து பாருங்கள். கட்டாயம் உங்கள் வீட்டில் கிருமிகளின் தொல்லை இருக்காது. எறும்புகளின் நடமாட்டம் குறைந்து விடும் தரைகளும் ஜில்ஜிலுவென்று குளிர்ச்சியாக மாறிவிடும்.

எனவே மேற்கூறிய இந்த குறிப்புக்களை பயன்படுத்தி இந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டு தரைகளை துடைத்து பாருங்கள் கட்டாயம் ஏற்படும் மாற்றம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …