“உண்மையான ஆம்பளை யாரையும் இன்னும்…” சிம்ரன் எமோஷனல் பேச்சு..!

தென்னிந்திய திரை உலகில் 90-களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சிம்ரன் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் கைகளை உயர்த்தி ஆடும் நடனத்திற்கும், இடுப்பு அசைவிக்கும் தமிழக இளைஞர்கள் பலரும் அடிமையாக இருந்தார்கள்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களோடு நடித்த சிம்ரனை பார்த்து அவரது தங்கை மோனலுக்கும் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வர வேண்டிய முதல் படமாக பத்ரி படம் அமைந்திருந்தது.

நடிகை சிம்ரன்..

எனினும் சிம்ரனின் தங்கை மோனல் தளபதியோடு இணைந்து நடித்த பத்ரி படம் வெளி வருவதற்கு முன்பே பார்வை ஒன்று போதுமே என்ற படத்தில் குணால் உடன் நடித்திருந்த படம் முதலில் ரிலீஸ் ஆனது. இந்த படம் இவருக்கு மிக நல்ல வெற்றியை தந்தது.

மேலும் இந்த படத்தில் இடம் பிடித்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இன்றும் இளைஞர்களின் மனதில் முணு முணுக்கக் கூடிய வகையில் உள்ளது. அந்த வகையில் அடுத்தடுத்த படங்களில் மோனல் நடித்த போதும் திடீரென தனது வீட்டில் தனது வாழ்வை முடித்துக் கொண்டார்.

இதற்கு அப்போதே பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் இவர் நடிகர் குணானாலை காதலித்ததை அடுத்து அவர் அந்த காதலை ஏற்றுக் கொள்ளாததால் தான் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்று ஊடகங்களில் விஷயங்கள் புகைந்தது.

உண்மையான ஆம்பள யாரையும்..

இதனை அடுத்து தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் ஹீரோயினியாக வலம் வந்த சிம்ரன் இது பற்றி அண்மை பேட்டியில் சொல்லும் பொழுது சற்று உணர்ச்சி வசமாக பேசியிருந்தார். அந்த பேச்சில் தனது தங்கை காதலித்து இருந்தது என்னமோ உண்மை தான்.

ஆனால் நடிகை மோனல் காதலித்தது குணாலை அல்ல. ஒரு டான்ஸ் மாஸ்டரின் தம்பியைத்தான் என்ற உண்மையை ஓப்பனாக சொன்னதோடு மட்டுமல்லாமல் மோனல் இறந்த சமயத்தில் எழுதிச் சென்ற கடிதத்தில் உண்மையான ஆம்பளையை என்னும் பார்க்கவே இல்லை என்று எழுதி இருந்ததையும் கூறி இருக்கிறார்.

எமோஷனலாய் பேசிய சிம்ரன்..

இதனை அடுத்து நடிகை சிம்ரன் அந்த டான்ஸ் மாஸ்டராக இருந்த நபரின் மீதும் அவரது தம்பியின் மீதும் வழக்கு கூட கொடுத்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் அந்த டான்ஸ் மாஸ்டர் குடும்பமானது தனது தங்கையின் காதலை ஏற்றுக் கொள்ளாததால் எனது தங்கை தவறான முடிவுக்கு சென்று விட்டாள் என்று சிம்ரன் கூறி இருக்கிறார்.

இந்த வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாத காரணத்தால் இந்த வழக்கு அன்றே மூடப்பட்டது. இது போன்ற விஷயங்கள் நடந்தேறிய சமயத்தில் சிம்ரன் கன்னடத்தில் பஞ்சதந்திரம் சினிமாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார்.

மேலும் மோனல் இறந்து 20 வருடங்களுக்கு மேலாகியும் தன்னுடைய தங்கையை இழந்த சோகத்தில் சிம்ரன் மீள முடியாமல் தவித்து வருகிறார். இதனை அடுத்து தனது தங்கை இறந்ததை அடுத்து அண்மையில் ஒரு போஸ்ட்யை ஷேர் செய்து இருக்கிறார்.

அந்த போஸ்டில் நீ இங்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எனக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பது போல பதிவிட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் மோனோ என இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டை பதிவிட்டு இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version