தளபதி விஜய் பட பாடகி ஜோனிடா படத்துக்கு கதாநாயகியாக வந்து விட்டார் – இவருடன் போட்டிக்கு தயாரா?

தமிழ்த் திரைத் துறையைப் பொருத்தவரை பாடகிகள் பலர் கதாநாயகிகளாக உருவாக்கி இருக்கிறார்கள் அந்த வரிசையில் விஜய் பட பாடகி ஜோனிடா காந்தி கதாநாயகியாக வர இருக்கிறார். இந்த ஜோனிடா காந்தி யார் தெரியுமா?

அனிருத் இசையில் பீஸ்டில் வரும் அரபி குத்து பாடலை பாடியவர் தான் ஜோனிடா காந்தி. இவர்   உடைய அழகிய குரலால் கிராமத்தில் இருக்கக்கூடிய ஆட்களில் இருந்து பட்டணத்தில் இருக்கக்கூடிய ஆட்கள் வரை அந்தப் பாடலுக்கு தாளம் போட வைத்து விட்டார்.

தமிழகத்தை அந்த அரபிக் குத்துப்பாடலால்  புரட்டிப்போட்ட ஜோனிடா  டெல்லியில் பிறந்து கனடாவில் வாழ்பவர். மிக சிறந்த பின்னனி பாடகியான இவர் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி என்று பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

மேலும் “டாக்டர்” படத்தில் இடம்பெற்ற செல்லமா பாடல் மூலம் இணையத்தில் பேமஸான ஜோனிடா. எப்போதும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒன்றுதான்.

 பாடகியாக கலக்கி வந்த இவர் தற்போது கதாநாயகியாக அவதாரம் எடுத்து அனைவர் மனதிலும் இடம் பிடிக்க வந்துகொண்டிருக்கிறார். 

இவர் நடிகாகின்ற படத்தின் பெயரே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. வாக்கிங் டாக்கிங் ஐஸ்கிரீம் என்ற படத்தை விநாயக் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்தவர் யார் என்பது தெரியுமா?

வேறுயாருமில்லை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவர் கணவர் விக்னேஷ் சிவனின் ரெளடி  பிக்சர்ஸ் தயாரித்துள்ள தான்.

இந்தப் படத்துக்கான பாஸ்புக் இமேஜை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டு இருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பல பாடல்களால் மக்கள் மனதை கவர்ந்த இவர் கதாநாயகியாக ஜொலிப்பார் என்பது இந்த படம் வெளிவந்த பின்பு தான் தெரியும். படத்தின் பெயரே மிகவும் நீளமாகவும் வித்தியாசமாக இருப்பதால் வினாயக் எப்படி இந்த படத்தை  கையாளுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …