ஒரே நாளில் மனோவை தெருவில் இழுத்து விட்ட மகன்கள்.. மார்பில் உதச்சி.. கட்டையில் அடிச்சு.. பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்..!

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான பாடகர்களில் மனுவுக்கும் கண்டிப்பாக முக்கியமான இடம் இருக்கும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பிறகு அவரை போலவே ஒரு புகழ்வாய்ந்த பாடகராக மனோ இருந்திருக்கிறார்.

சொல்ல போனால் எஸ்.பி.பிக்கும் மனோவுக்கும் குரலில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை பார்க்க முடியும். நடிகர் ரஜினிகாந்திற்கு அதிகபட்சமாக பாடல்கள் பாடிய பாடகராக மனோ இருக்கிறார். ஒரு பாடகர் என்பதையும் தாண்டி இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் மிகவும் புகழ்பெற்றவர் மனோ.

மனோவை தெருவில் இழுத்து விட்ட மகன்கள்

அதேசமயம் பிற்காலங்களில் நிறைய இசை நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருந்தார். அதேபோல தற்சமயம் நிறைய டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார் மனோ. இந்த நிலையில் மனோவின் மகன்கள் சமீபத்தில் செய்த சம்பவம் ஒன்று அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மனோவின் மகன்கள் கல்லூரி மாணவர்களை இருவரும் கொடூரமாக தாக்கி இருக்கும் சம்பவம் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்கள் சாப்பிடுவதற்காக வெளியில் வந்த சமயம் அவர்களுக்கும் மனோவின் மகன்களுக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஆகியுள்ளது.

மார்பில் உதச்சி

அந்த பிரச்சனை தீவிரமடையவே அந்த இரு மாணவர்களையும் பயங்கரமாக தாக்கி இருக்கின்றனர் மனோவின் மகன்கள். மேலும் அவர்கள் இருவரும் அப்பொழுது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறும் பொழுது எங்களை தகாத வார்த்தையில் திட்டினார்கள்.

Singer Mano son Shakir Press Meet Stills

அதனால்தான் என்னவென்று கேட்டோம். ஆனால் பதிலுக்கு அவர்கள் ஆட்களை அழைத்து வந்து சரமாரியாக தாக்கத் துவங்கிவிட்டனர் என்று கூறி இருக்கின்றனர். அதில் அடிபட்ட ஒரு மாணவனுக்கு பின் மண்டையில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்

இந்த நிலையில் விஷயம் தீவிரமடைந்ததை அடுத்து இவர்கள் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் போலீஸ் இவர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. மனோவின் மகனான சாகிர் குறித்து இந்த மாதிரியான குற்றச்சாட்டு எழுவது இது ஒன்றும் புதிது கிடையாது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பெண்களுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி அவர்களிடம் தவறாக பேசியதாக இவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதேபோல சிலருக்கு மயக்க மருந்தை கொடுத்து அவர்களை தவறாக இவர் புகைப்படம் எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இது மனோவின் சினிமா வாழ்க்கையையும் பாதிக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. சினிமா வட்டாரத்தில் தற்சமயம் அதிகமாக பேசப்படும் விஷயமாக இது மாறியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version