அந்தரங்கமான விஷயத்தை பேசுறதுனால.. பாடகி ராஜலட்சுமி வெளியிட்ட வீடியோ..!

விஜய் டிவியின் மூலம் பிரபலமான பாடகிகளில் ஒருவராக மாறியிருக்கும் ராஜலட்சுமி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

விஜய் டிவி கொடுத்த பிரபலத்தை அடுத்து பல வெளி நாடுகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தி வரும் இவரும் இவர் கணவர் செந்திலும் தற்போது திரைப்படங்களில் பாடல்களை பாடவும் நடிக்க கூடிய வாய்ப்புகளை பெற்று இருக்கிறார்கள்.

பாடகி ராஜலட்சுமி..

அந்த வகையில் நாட்டுப்புறப் பாடகியான ராஜலட்சுமி அண்மையில் லைசென்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து அனைவரும் அவரது நடிப்பை திரையில் பார்க்க ஆவலோடு காத்திருந்தார்கள்.

மேலும் பாடகி ராஜலட்சுமி தமிழில் அடுத்தடுத்த பாடல்களை பாடி வருவதோடு நடிப்பில் கவனத்தை செலுத்தி வருவதால் படு பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த வகையில் இவர் தனது கணவரோடு வெளிநாடுகளில் சென்று இசை கச்சேரிகள் செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு நுனி நாக்கில் ஆங்கிலத்தை உச்சரித்து மார்டன் உடையில் அனைவரையும் கவர்ந்தார்.

அந்தரங்க விஷயத்தை பேசுறதுனால..

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக் கூடிய இவர் அவ்வப்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

மேலும் youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரக்கூடிய இவர் தற்போது பேசியிருக்கும் பேசானது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. இதற்கு காரணம் பொதுவாக பிரபலமாக இருக்கக் கூடிய நபர்களின் அந்தரங்க விஷயத்தை பேசுவதால் எந்த விதமான பிரயோஜனம் இல்லை என்பதை உதாரணத்தோடு கூறி இருக்கிறார்.

மேலும் அது பற்றி பேசும் போது அது அவர்களின் வளர்ச்சியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சரியான மன மகிழ்ச்சியையும் தராது. இதனால் வீண் விவாதங்கள் தான் பெருகுமே ஒழிய கடுகளவு பிரயோஜனம் இல்லை என்பதை சொல்லிவிட்டார்.

மேலும் அவர் உதாரணமாக கூறியது எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் வரிகளை தான். இதில் ஒரு மனிதனுடைய பெருமை எல்லாவற்றையும் அவனுடைய அந்தரங்கமான விஷயங்களை பேசுவதை ஒரு பிழைப்பாக வைத்திருப்பது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கேடுதானே ஒழிய லாபம் கிடையாது.

வைரல் வீடியோ..

இந்த வரிகளை சொல்லும் போதே மிகவும் கோபமாக சொல்லி இருக்கிறார் என்று ராஜலட்சுமி சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த வரிகளில் முழு பொருளையும் நேர்த்தியான முறையில் கூறிய வீடியோவானது தற்போது வைரலாக வலைத்தளங்களில் உலா வருகிறது.

இதனை அடுத்து எந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் பேசி வருவதோடு வாழ்க்கையில் முடியாதது எதுவும் இல்லை. முடியாது என்று சொல்லுவது மூடநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்லுவதே தன்னம்பிக்கை என்பதை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

எனவே இனி மேலாவது கண்ணும் கருத்துமாக அவர்கள் செயல்களை செய்ய வேண்டும். அதை விடுத்து வீணாக மற்றவர் பற்றி புரளி பேசுவதை தவிர்ப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பதை ராஜலக்ஷ்மி நேர்த்தியான முறையில் தெரிவித்துவிட்டார்.

நீங்களும் இதனை உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக நினைத்து ஃபாலோ செய்யும் போது உங்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் நண்பர் வட்டம் அதிகரிக்கும் என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version