GV இதை பண்றது எனக்கு பிடிக்காது..நான் எவ்ளோ சொல்லியும் கேக்கல.. போட்டு உடைத்த சைந்தவி..!

திரைஉலகில் நடிக்கக்கூடிய நடிகர்கள் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அது போலவே திரை உலகில் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் காதல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. பள்ளி பருவத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்ததாக பேட்டிகளில் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அந்த காதல் மாயமாய் மாறி விவாகரத்து வரை சென்றதன் காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் முழித்தார்கள்.

ஜிவி இத பண்றது பிடிக்கல..

திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இவர்கள் திடீர் என பிரிய போவதாக அறிவித்த அறிவிப்பானது இணையங்களை காட்டு தீ போல பரவியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் மாபெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக இணை பிரியாத ஆதர்ஷன தம்பதிகளாக திகழ்ந்த இவர்களுக்கு அண்மையில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்காக இணைந்து வாழலாமே என்று பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருந்தார்கள்.

எனினும் அவர்கள் பிரிவு உறுதியானதை அடுத்து அதை இணையதள பக்கங்களில் வெளியிட்டு மன அமைதிக்காகவும் தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லி இதை அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் பலரும் வாய் அடைத்துப் போனார்கள்.

எவ்வளவு சொல்லியும் கேட்கல..

இதனை அடுத்து இவர்கள் விவாகரத்து பெறக்கூடிய அளவு இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று பல்வேறு வகைகளில் பேச்சுக்கள் எழுந்த நிலையில் தற்போது நான் எவ்வளவு சொல்லியும் ஜிவி பிரகாஷ் கேட்கவில்லை என்ற உண்மையைச் சொல்லி அதிர்ச்சியை கிளப்பி விட்டு இருக்கிறார் சைத்தவி.

அவர் அப்படி என்ன தான் சொல்லி ஜிவி பிரகாஷ் அதை செய்யவில்லை. ஜிவி பிரகாஷ் பண்ணிய விஷயம் தனக்கு பிடிக்காது என்று சைந்தவி கூறி இருப்பார் என்று ரசிகர்கள் பல்வேறு வகையான கோணங்களில் யோசித்து வருகிறார்கள்.

ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக இருக்கும் வரை சைந்தவியோடு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இதனை அடுத்து நடிகராக திரையுலகில் தடம் பதிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்தே அவர்களுக்குள் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தான் ஜிவி இதை பண்றது எனக்கு பிடிக்காது. நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல என்ற விஷயத்தை தற்போது வெட்ட வெளிச்சமாக சைந்தவி கூறி இருக்கிறார்.

உண்மையை உடைத்த சைந்தவி..

அது பற்றி சைந்தவி சொல்லும் போது ஜிவி பிரகாஷ் படத்தில் நடித்த போகிறார் என்று தெரிந்ததுமே நான் சில கண்டிஷங்களை போட்டேன். அதில் குறிப்பாக படங்களில் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வது போன்ற விஷயங்களில் சில கண்டிஷங்களை போட்டு வைத்திருந்தேன்.

ஆனால் இந்த கண்டிஷனை அவர் பின் தொடரவில்லை. மேலும் நான் எவ்வளவு சொல்லியும் என் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

இந்த விஷயம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று வற்புறுத்திய போதும் அதைப்பற்றி காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து இது போன்ற விஷயங்களில் அதிக அளவு தன்னை ஈடுபடுத்தி கொண்டு திரைப்படங்களில் நடித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவி சைந்தவி கூறியது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர்களது பிரிவுக்கு காரணம் இது தான் என்று பேசி வருவதோடு சைந்தவி சொன்னதில் தவறில்லை.
ஜிவி பிரகாஷ் திரைப்படத்தில் ஹீரோயினிகளோடு நடிக்கும் போது சற்று அடக்கி வாசித்திருக்கலாம் என்று ஓப்பனாக சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version