விஜய் சங்கீதா பிரிவை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் 41 வயசு நடிகை.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரைப் போலவே தமிழ் திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக திகழும் நடிகை திரிஷா தளபதி விஜயோடு கில்லி படத்தில் நடித்ததை அடுத்து தற்போது லியோ படத்தில் லிப் லாக் கிஸ் அடித்து அனைவரையும் அதிர வைத்தார்.

விஜய் சங்கீதா பிரிவை சாதகமாக்கும் நடிகை..

இந்நிலையில் தளபதி விஜய் கோட் மற்றும் தளபதி 69 படத்தில் நடித்த முடித்து பின்னர் அரசியலில் முழு நேரமாக ஈடுபட இருப்பதாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதில் உறுப்பினர் சேர்க்கையையும் படு வேகமாக நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தியேட்டர் ஸ்டாரான விஜய் திரைப்படத்திலிருந்து நடிப்பதை விடுத்து விட்டால் தியேட்டரில் வருமானம் குறைந்து போகும், என்றாலும் மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்வார்கள் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் அவரது வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து படு வேகமாக தனது அரசியல் கட்சியை வலுப்படுத்தக்கூடிய வழி முறைகளை ஃபாலோ செய்து வரும் தளபதி விஜய் அண்மையில் ஏற்பட்ட கள்ளச்சாராய சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த பதிவை வெளியிட்டு ஆளும் கட்சியை நடுங்க வைத்தார்.

இந்நிலையில் ஏற்கனவே இணையங்களில் தளபதி விஜய் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்வதாக அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

விஷயத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்..

இதனை அடுத்து எந்த விஷயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் திரிஷா பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை புட்டு, புட்டு வைத்திருக்கிறார் பிரபல பாடகி சுசித்ரா.

இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் சமீப காலமாக விஜய் திரிஷா பற்றிய கிசுகிசுக்கள் அதிகளவு இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதை இது குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த விஷயத்திற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் சில தினங்களுக்கு முன் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என சொல்லி விஜய் பேசியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஆத்தாடி இம்புட்டு விஷயம் இருக்கா?..

ஆனாலும் இந்த வதந்தி இன்று வரை அடங்காமல் அனுமார் வால் போல வளர்ந்து கொண்டே வருகிறது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் விஜய் சிறந்த அரசியல்வாதியாக வளர அவரது அப்பா சந்திரசேகர் மற்றும் மனைவி சங்கீதா என அனைவரும் இணைய வேண்டும் என்ற விஷயத்தை பாடகி சுசித்ரா தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு திரிஷா போன்ற ஒட்டுண்ணிகள் அவர் பக்கத்தில் நெருங்க முடியாது என்ற கருத்தை சொல்லி இருக்கும் சுசித்ரா விஜய் திரிஷா இருவரும் மக்கள் மத்தியில் எம்ஜிஆர் ஜெயலலிதா என வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் எதார்த்தமாக பார்க்கும் போது திரிஷாவால் ஆட்சியை கைப்பற்ற முடியாது. அதற்கு மாறாக பாஜகவில் சேர்ந்து பணிபுரியலாம் என்று நக்கலாக பேசியிருக்கிறார்.

இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version