சுசித்ராவின் இரண்டாவது கணவர்.. எப்படி காதல் மலர்ந்தது தெரியுமா..?

தற்போது இணையதள பக்கங்களை ஓப்பன் செய்தாலே பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டிகளும், பல பிரபலங்களின் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் தான் அதிக அளவு உள்ளது என்று சொல்லலாம்.

பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் வானொலியில் ஆர்ஜே-வாக பணிபுரிந்ததை அடுத்து விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறினார்.

பாடகி சுசித்ரா..

பன்முகத் திறமையை கொண்ட பாடகி சுசித்ரா ஜேஜே படத்தில் இடம் பிடித்த மே மாசம் 98 இல் என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அத்தோடு வல்லவன் படத்தில் இடம் பிடித்த எம்மாடி ஆத்தாடி பட பாடலையும் மங்காத்தாவில் இடம் பிடித்த வாடா பில்லேடா உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர்.

மேலும் தனது ட்விட்டர் அக்கவுண்டில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளிப்படுத்தி பெரிய அதிர்ச்சியை கிளப்பிய இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை காரணத்தால் விவாகரத்து செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது திரை துறையில் பிரபலமாக இருக்கும் நடிகர் தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் திரிஷா என பல முக்கிய பிரபலங்களின் முகத்திரையை கிழித்து எறிய கூடிய வகையில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை கண்டறிந்து கொள்வதற்கு முன்பு இவர் தினம் தினம் கொடுத்து வரும் பேட்டியால் ஹோலிவுட் வட்டாரங்கள் திணறி வருகிறது.

சுசித்ராவின் இரண்டாவது கணவர்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பாடகி சுசித்ரா தனது இரண்டாவது கணவர் குறித்து ஓப்பனாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். இந்த விஷயங்களும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அந்த பேட்டியில் தனது இரண்டாவது கணவர் போல ஒரு கணவர் கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னதோடு அவரது பெயர் ராஜா வழக்கறிஞராக இருக்கிறார் என்றார்.

மென்பொருள் துறையில் பாடகி சுசித்ரா பயின்ற போது போர்ட் ஹவுஸில் ரோவிங் பயிற்சிக்காக சென்ற போது பழக்கம் ஏற்பட்டது. முதலில் நார்மலாக தான் இந்த பழக்கம் இருந்ததாக கூறிய அவர் நாள் செல்ல, செல்ல நெருக்கமாக்கி உள்ளது என்றார்.

அந்த சமயத்தில் தனது அக்கா தனது சொத்தை ஆக்கிரமிக்க நினைத்த போது எனக்காக வழக்கறிஞராக ஆஜரான ராஜா ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

மேலும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது நான், அவர் இரண்டு குழந்தைகள், அவரது அம்மா என ஐந்து பேரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பேசி இருக்கிறார்.

அட இப்படியா காதல் பூத்தது..

இதனை அடுத்து தனக்காக கோர்ட்டில் வாதாட முன் வந்த ராஜாவுடன் இப்படித்தான் காதல் பூத்தது என்ற விஷயத்தை பக்குவமாக சொன்னதை அடுத்து இணையத்தில் இந்த விஷயம் வைரலாக பரவி வருவதோடு சுசித்ராவின் இரண்டாவது கணவரோடு இப்படித்தான் காதல் வந்ததா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் இவர் முன்னாள் கணவர் குறித்து கூறிய தகவல்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் கார்த்திக் குமாரும் வீடியோவை பதிவிட்டு இருந்த நிலையில் அவர் பட்டியல் இன மக்களை கேவலமாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில் அதையும் அவர் மறுத்திருந்தார் என்பதையும் நீங்கள் இணையம் வழியாக அறிந்து கொண்டிருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version