ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து..! பாடகி சுசித்ரா போட்ட குண்டு..! மிரண்டு போன ரசிகர்கள்..!

தற்போது திரை உலகில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளின் மத்தியில் கருத்து வேற்றுமைகள் அதிகரித்து வருவதால் விவாகரத்துக்கள் எளிதில் நடந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது இணையங்களில் ஜெயம் ரவியின் மற்றும் ஆர்த்தி தம்பதிகளின் விவாகரத்து பிரச்சனை படு சூடாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா, தனுஷ் விவகாரம் மற்றும் அண்மையில் ஜிவி பிரகாஷின் விவாகரத்து விஷயங்கள் இணையங்களில் லீக் ஆகி ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது ஜெயம் ரவியின் விவாகாரம் விஸ்வரூபமாக மாறி உள்ளது.

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து..

தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் ட்ரெண்டிங் டாபிக்காக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து குறித்து பாடகி சுசித்ரா தனது youtube தளத்தில் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி 2009 – ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் ஆரவ், ரவி நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.

இது வரையில் மிகவும் அன்னியோன்யமான தம்பதிகளாக வாழ்ந்து வந்த ஜெயம் ரவி, ஆர்த்தி தங்கள் குடும்பத்தில் நடக்கக் கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியையும் போட்டோவாகவோ, வீடியோவாகவோ இணையங்களில் வெளியிட்டு அவர்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.

இந்நிலையில் ஜீவி பிரகாஷ் விவகாரத்தில் நடந்தது போல அண்மையில் ஆர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஜெயம் ரவி புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியதை அடுத்து விரைவில் இவர்கள் விவாகரத்தில் செய்ய இருப்பதாக இணையங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்தது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று யோசித்து வரக்கூடிய வேளையில் இவர்களது பிரிவு குறித்து பாடகி சுசித்ரா youtube பக்கத்தில் பேசியிருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டது.

பாடகி சுசித்ரா போட்ட குண்டு..

இதற்கு காரணம் இந்த விவகாரத்தில் ஜெயம் ரவிக்கு ஆதரவாக பாடகி சுசித்ரா சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அந்த வகையில் ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது. அவர் மிகவும் ஆடம்பரமான பெண் அப்படி இருக்கும் போது ஜெயம் ரவி நைட் அண்ட் டே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படியே வேலை செய்து வீட்டுக்குச் சென்றாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்ல முடியாது. அத்தோடு ஜெயம் ரவி பார்ப்பதற்கு கொஞ்சம் ஹேண்ட்ஸ்சமாக இருந்ததால் அவர் முகத்தைப் பார்த்து வாழ்ந்து விட்டார்.

அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவி குடும்பத்தார் சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள். இவர்களது குடும்பம் எப்போதும் மற்றவர்களை மதிக்கக்கூடிய குடும்பமாக உள்ளது என்று சுசித்ரா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

மிரண்டு போன ரசிகர்கள்..

இதனைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் மிரண்டு போய் இருப்பதோடு இவர்கள் விவாகரத்து உறுதியானதா? என்ற கேள்வியையும் எடுத்து இருக்கிறார்கள். இதற்கான விடையை அவர்கள் சொன்னால் மட்டும் தான் உண்மை நிலை என்ன என்பது நமக்கு தெரியவரும்.

மேலும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரக்கூடிய ஜெயம் ரவிக்கு வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட போராட்டம் ஏற்பட்டு இருப்பதை நினைத்து ரசிகர்கள் அனைவரும் மன சங்கடத்தில் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version