சிறகடிக்க ஆசை சீரியல் முத்து மீனாவிற்கு வந்த புது பிரச்சனை.. சமாளிக்க போவது எப்படி..? என்ன ஆனது?

திரைப்படங்களைப் பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு கூட்டம் இருப்பது போல சீரியல்களைப் பார்ப்பதற்கு என்று இல்லத்தரசிகள் காத்து இருக்கிறார்கள். காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்களில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி சில விஷயங்களை பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை..

ஒவ்வொரு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டை பெறுவதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டியது இல்லை.

சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவியில் விறுவிறுப்பான கதை அம்சத்தோடு இருக்கும் சீரியல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மிக சுவாரஸ்யமாக இருப்பதால் இந்த சீரியலை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

இதையும் படிங்க: என்னோட கணவருடன் இது தான் பிரச்சனை.. முதன் முறையாக போட்டு உடைத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே..!

அந்த ரசிகர்களின் பெருத்த ஆதரவுடன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் சில சுவாரசியமான திருப்பங்களுடன் நகர உள்ளது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

முத்து மீனாவின் புது பிரச்சனை..

மேலும் இந்த தொடரில் அண்ணாமலை குடும்பத்தை மையமாகக் கொண்டு கதை இருந்தாலும் கதையில் முக்கியமாக முத்து மீனா என்ற கதாபாத்திரத்தை சுற்றித் தான் கதை முழுவதுமே நகர்ந்து செல்லும்.

அந்த வகையில் தற்போது கதையில் முத்து மீனாவிற்கு ஒரு கல்யாண ஆர்டர் வாங்கி 500 மாலைகளை குடும்பத்துடன் கட்டியிருக்கிறார். இவர் இவ்வாறு செய்வது விஜயா, மனோஜ், ரோகினி போன்ற கேரக்டர்களுக்கு பிடிக்காமல் உள்ளது.

எப்படி சமாளிப்பார்..

இந்நிலையில் முத்து மீனா சொன்ன இந்த 500 மாலைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்றைய எபிசோட் முடிந்ததும் நாளைய எபிசோட்டு காண புரோமோ தற்போது வெளி வந்துள்ளது.

அந்தப் புரோமோவில் முத்துவிடம் மாலை கொண்டு சென்றவர் மாலையுடன் தனது வண்டியும் காணவில்லை என்ற ஷாக்கிங் தகவலை கூறியதை அடுத்து கதையில் சுவாரஸ்யம் எகிறி உள்ளது.

இதனால் மிகவும் பதட்டம் அடைந்த முத்து என்ன செய்யப் போகிறார். இனி கதையில் என்ன நடக்கப் போகிறது என்பது யாரும் யோசிக்க முடியாத அளவு உள்ளது. சிட்டி அந்த மாலையை கடத்த ஏற்கனவே பிளான் போட்ட நிலையில் எப்படி முத்து மாலையை சொன்ன படி கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.

இதையும் படிங்க: “தொலைக்காட்சி திரைமறைவில் இது தான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்” – நடிகை தீபா அதிர்ச்சி தகவல்

அது வரை கட்டாயம் நீங்கள் காத்திருக்கலாம் அல்லது உங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு கதை எப்படி நகரும் என்பதை நீங்கள் யோசிக்கலாம்.

மேலும் இந்தப் புரோமோவை அடுத்து சிறக்கடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவிற்கு வந்த புதிய பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார் என ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதோடு இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டார்கள்.

இதனை அடுத்து நாளைய எபிசோட் எப்படி இருக்கும் என்பதை பற்றிய நினைப்பில் பலரும் காத்திருக்கிறார்கள். நிச்சயமாக முத்து மீனா இந்த பிரச்சனையில் இருந்து வெளி வருவார் என்று அனைவரும் நம்புகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam