சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடிச்ச நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில நடிகைகள் அறிமுகமாகின்றனர். பின்னர் அடுத்த பத்து ஆண்டுகளில் கதாநாயகியாக நடிக்க வந்துவிடுகின்றனர்.

இப்படி பல நடிகைகள், தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நாயகிகளாக நடித்து, முன்னணி நாயகிகளாக மாறி உள்ளனர்.

பேபி ஷாலினி

உதாரணமாக சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் பேபி ஷாலினியாக நடித்த நடிகை ஷாலினி, பின் அமர்க்களம் படத்தில் அஜீத்குமார் ஜோடியாகவும், காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கும் ஜோடியாக நடித்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் பேபி மீனாவாக நடித்தவர், அடுத்து எஜமான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக, நடிகை மீனா நடித்தார்.

நடிகை ஸ்ரீதேவி, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்பு, நடிகையாக மாறி ரஜினி, கமல் போன்ற முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக…

தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் பல நடிகைகள், குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் கதாநாயகிகளாக மாறியிருக்கின்றனர்.

நடிகர் அஜீத்குமார் படத்தில் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன், இப்போது கதாநாயகி நடிக்கும் இளம்பெண்ணாக, சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார்.

அதே போல் அப்பா படத்தில் சிறுமியாக நடித்த கேப்ரியல்லா, இப்போது நாயகியாக நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: மேலாடையின்றி… எதை கொண்டும் மறைக்காமல் காட்டும்.. தமன்னா.. வெடவெடத்து போன ரசிகர்கள்..

பூவிழி வாசலிலேே போன்ற பல படங்களில் சிறுமியாக நடித்த சுஜிதா தான், இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சுஜிதா. அதே போல் அன்புடன், சதிலீலாவதி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகா தான், இம்சை அரசன் 23ம் புலிகேசி, அழகி போன்ற படங்களில் இளம்பெண்ணாக நடித்திருந்தார்.

சிறுத்தை படத்தில்…

அந்த வகையில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த சிறுத்தை படத்தில் அவரது மகளாக நடித்தவர் சிறுமி ரக்‌ஷனா.

தெலுங்கில் இருந்து தமிழில் ரீ மேக் செய்யப்பட்ட படம்தான் சிறுத்தை. இந்த படத்தை இயக்கிய பிறகுதான், டைரக்டர் சிவா, சிறுத்தை சிவா என்று பெயர் மாற்றம் பெற்றார்.

இந்த படங்களுக்கு பிறகு வீரம், விஸ்வாசம், அண்ணாத்த படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, இப்போது சூரியா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார்.

மகளாக நடித்த பெண் இவரா…

சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த ரக்‌ஷனா, இப்போது வளர்ந்த பெண்ணாக மாறியிருக்கிறார். அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த பெண் இவரா, என ஆச்சரியப்படுகின்றனர்.

கார்த்தி நடித்த சிறுத்தை மட்டுமின்றி ஓ காதல் கண்மணி என்ற மணிரத்னம் படத்திலும், விஷால் நடித்த பாண்டியநாடு படத்திலும் ரக்‌ஷனா, குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: பெண்கள் கன்னித்தன்மையை இதற்கு முன்பு இழப்பதில் தப்பில்ல.. வெக்கமின்றி கூறிய யாஷிகா ஆனந்த்..

சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடிச்ச நடிகையா இது என்று ரக்‌ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version