Site icon Tamizhakam

ஹீரோ அங்க அழுதுகிட்டு இருக்கார்.. இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க.. திரிஷாவை விளாசிய இயக்குனர்..!

கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் இளமை மாறாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை பலருக்கும் முகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

இன்னும் சிலரை எல்லாம் அடையாளமே கண்டுகொள்ள முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு முகத்தில் மாற்றங்கள் பல நடிகர்கள் நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த பொழுது நயன்தாரா எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் இப்பொழுது இருக்கும் நயன்தாராவோடு ஒப்பிட்டு பார்த்தால் நிறைய மாற்றங்கள் தெரியும். ஆனால் திரிஷாவை பொறுத்தவரை 20 வருடங்களுக்கு முன்பு கில்லி மாதிரியான திரைப்படத்தில் நடித்த த்ரிஷாவின் முகத்தை இப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது.

மார்க்கெட் குறையாத நடிகை:

அப்படி தனது முக அழகை சரியாக பராமரித்து வருபவர் நடிகை திரிஷா. அதன் மூலமாகதான் தொடர்ந்து வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் இயக்குனர் பிரியதர்ஷின் இயக்கிய லேசா லேசா திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திரிஷா.

ஆனால் அந்த திரைப்படம் தாமதமாக வெளியானதால் அது அவரது முதல் திரைப்படமாக அமையாமல் போனது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளையும் பெற துவங்கினார் திரிஷா தொடர்ந்து விஜய் நடித்த லியோ, தற்சமயம் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ஆகிய படங்களில் எல்லாம் கதாநாயகியாக நடித்துள்ளார் திரிஷா.

கடுப்பான ஒளிப்பதிவாளர்:

அவருடைய வயதுக்கு இப்பொழுதும் கதாநாயகியாக நடிப்பது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இடையில் சில நாட்கள் சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார் திரிஷா. இந்த நிலையில் திரிஷாவை இயக்குனர் சிறுத்தை சிவா திட்டிய சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது.

திரிஷாவும் ஸ்ரீகாந்த்தும் நடித்த மனசெல்லாம் என்கிற படத்தை இப்போதைய பிரபல இயக்குனராக இருக்கும் சிறுத்தை சிவாதான் ஒளிப்பதிவு செய்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திரிஷா ரொம்பவே அமைதியாக இருப்பாராம்.

எப்போதும் கையில் போனும் கையுமாக அவர் இருப்பார். ஒருமுறை காட்சி ஒன்றில் ஸ்ரீகாந்த் அழுதபடி நடித்துக் கொண்டிருந்தாராம். ஆனால் திரிஷாவோ நாற்காலியில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்தாராம். அதனை கவனித்த சிவா ஏம்மா அங்க ஹீரோ அழுதுகிட்டு இருக்கார் நீ என்னனா போன பார்த்துகிட்டு இருக்க அப்படி என்னதான் அதில் பண்ணுற என சத்தம் போட்டு விட்டாராம்.

உடனே திரிஷா எந்தவித பதற்றமும் இல்லாமல் ஓகே கூல் கூல் என்று சொல்லி சமாதானப்படுத்தினாராம். இதனை நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Exit mobile version