சிம்மக் குரலோன் பெயருக்கு சொந்தமான செவாலியே சிவாஜி கணேசன் 96 பிறந்தநாள்..!

தென்னிந்திய திரைப்பட உலகில் மிகச் சிறந்த நடிகர்கள் என்ற பட்டியலில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்தவர் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்கள். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி ஆகும்.

இளம் வயது முதலே நடிப்பில் பேரார்வம் கொண்டவர். இவர் திரைத்துறையில் கால் பதிக்கும் முன்பு மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார் இவர் முதல் முதலில் நடித்த கதாபாத்திரம் மாடத்தில் நின்று ராமனை பார்த்து வெட்கப்படும் சீதையாக. அதைத்தொடர்ந்து சத்ரபதி சிவாஜியின் கதாபாத்திரத்தை ஏற்று மேடை நாடகத்தில் நடித்தார் நாடகத்தைப் பார்த்த ஈ.வே.ரா அவர்கள் தான் இவருக்கு சிவாஜி கணேசன் என்ற பெயரை சூட்டி உள்ளார்.

இவர் மேடை நாடகங்களில் நடித்ததன் மூலமாக 1952 ல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்னும் திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

மேலும் இந்திய திரைப்படங்களில் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேலாக நடித்த ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமை கொண்டவர், தமிழில் 275 படங்களும், தெலுங்கில் 9 படங்களும், இந்தி மற்றும் மலையாளத்தில் தலா 2 படங்களும், மேலும் கௌரவ நடிகராக 17 திரைப்படங்களிலும் நடித்த பெருமையுடைய ஒரே தமிழ் நடிகர் இவர்தான்.

இவர் நடிப்பை போலவே அரசியலிலும் பேரார்வம் கொண்டவர் நடிகர் திலகம்  அரசியல் வாழ்க்கையில் அவருக்கு அவ்வளவு வெற்றியை தரவில்லை. 1960 ஆம் ஆண்டு  சிறந்த நடிகருக்கான விருதும், 1966 பத்மஸ்ரீ விருது, 1984 இல் பத்மபூஷன் விருது, 1955 செவாலியே விருது, 1997 தாதா சாகிப் பல்கோ விருது 1962 இல் சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது நயாகரா மாநகரின் “ஒரு நாள் நகரத் தந்தை” என்றும் கவுரவிக்கப்பட்டார்.

மேலும்  நடிப்பு அரசியல் போன்ற சிவாஜி கணேசன் அவர்கள் தனது குடும்பத்தின் மீதும் பேரன்பு கொண்டவர் சிவாஜி கணேசன் அவர்களின் துணைவியார் கமலா, இவர்களுக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.

நடிகர் திலகம் சூரக்கோட்டையில் அக்டோபர் 1 1928 – ல் பிறந்தார். எனவே இவரை சூரக்கோட்டை சிங்கம் என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைப்பார்கள்.

தமிழ் திரையுலகமே கொண்டாடிய நடிகர் திலகம் அவர்கள் சுவாசப் பிரச்சினை காரணமாக ஜூலை 21 2001 ஆம் ஆண்டு தனது 74 வது வயதில் மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

நடிகர் திலகம் அவர்கள் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …