மகன் ஆசையாய் கேட்டும் கொடுக்காமல்.. அந்த நடிகருக்கு தூக்கி கொடுத்த சிவாஜி.. சுவாரஸ்ய தகவல்..

தமிழ் சினிமாவில் 1960களில் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

எம்ஜிஆர் – சிவாஜி கணேசன்

இன்றைய விஜய், அஜீத், நேற்றைய ரஜினி, கமலுக்கு முன்னோடியாக, தமிழ் சினிமாவில் செம போட்டியாளர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன்தான்.

சிவாஜி கணேசனை பொருத்தவரை எம்ஜிஆருக்கும், இவருக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு. பழக்கவழக்கத்தில், கேரக்டரில் அவர் ஒருவிதமாக இருப்பார். இவர் வேறுமாதிரியாக இருப்பார்.

தன் உணவை கூட கொடுப்பவர்

உதாரணமாக எம்ஜிஆர், தான் உண்ண வைத்திருக்கும் உணவை கூட யாராவது பசி என்று கேட்டால் உடனே சந்தோஷமாக கொடுத்து விடுவார்.

ஆனால் சிவாஜிக்கு பிடித்த பொருள் என்றால், அது பெற்ற மகனே கேட்டாலும் கொடுக்க மாட்டார்.

மோகன்லால்

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுகுறித்து மலையாள நடிகர் மோகன்லால் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஒருமுறை நான் சிவாஜி கணேசனை பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றேன்.

அப்போது அவர் என் கையை பிடித்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று காட்டியது, நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

மலையாள படங்களில் சிவாஜி நடிக்க வந்த போது, ஒரு சாதாரண நடிகராக தான் மற்றவர்களிடம் எளிமையாக பழகினார். இயக்குநர், பிற நடிகர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்தார். யாரிடமும் குற்றம் குறை சொல்ல மாட்டார்.

வாத்துக்கறி என்றால்…

படப்பிடிப்பு தடைபட்டாலும் கோபப்படாமல் அனுசரித்து நடித்துக்கொடுப்பார். ஒரு முறை படப்பிடிப்புக்காக வந்த போது என்னுடன் தங்கினார். வாத்துக்கறி என்றால் சிவாஜி விரும்பி சாப்பிடுவார்.

அதே போல் மற்ற அசைவ வகைகளையும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவது அவரது வழக்கம். அவர் விரும்பிய அசைவ வகைகள், சாப்பாட்டு மேஜைக்கு வந்துவிட்டால் குழந்தை போல சந்தோஷப்படுவது போல மாறிவிடுவார்.

அவர் வாங்கிய விருதுகளை அவரது வீட்டில் பார்த்த போது ஏதோ அருங்காட்சியகத்தை சுற்றி பார்ப்பது போல் இருந்தது.

அவருக்கு பிடித்தமான பொருட்கள் என்றால், அவரே வைத்துக் கொள்வார். அவரது மகன்கள் கேட்டாலும் கொடுக்க மறுத்து விடுவாராம்.

மோகன்லால் கையில்…

சிவாஜி கையில் ஒரு வாட்ச் கட்டியிருக்கிறார். அதை மோகன்லால் அடிக்கடி பார்த்திருக்கிறார். இதை கவனித்த சிவாஜிகணேசன், அதை கழற்றி மோகன்லால் கையில் மாட்டியிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின், ஒருமுறை மோகன்லால் பிரபுவை சந்தித்த போது இதுபற்றி கூறியிருக்கிறார்.

அப்போது பிரபு, இது அப்பாவுக்கு ரொம்பவும் பிடிச்ச வாட்ச். அவருக்கு பிடித்ததை யாருக்குமே கொடுக்க மாட்டார்.

வாட்ச் கொடுத்தார்

ஆனால் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்றால், அவருக்கு உங்களை ரொம்பவும் பிடித்திருக்கிறது அர்த்தம், என்று பிரபு கூறியதாக மோகன்லால் அதில் கூறியிருக்கிறார்.

மகன் ஆசையாய் கேட்டும் கொடுக்காமல், தன் கையில் கட்டியிருந்த வாட்சை மோகன்லாலுக்கு தூக்கி கொடுத்தார் சிவாஜி என்ற சுவாரஸ்ய தகவலை மோகன்லால் இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version