நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இயக்குனர் மிஷ்கின் மோதலா? என்ன காரணம்? தெரிந்து கொள்ள உள்ளே படிக்க…!

 டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் மாவீரன்.

 இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக விருமன் படத்தில் பட்டையை கிளப்பிய அதிதி ஷங்கர் இணைகிறார். மேலும் இந்த படத்தில் சரிதா, இயக்குனர் மிஸ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

 ஏற்கனவே எந்த படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்னென்ன விவரம் என்பதை மிகத் தெளிவாக எங்க திரைப்படக் குழு வெளியிட்ட நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது.

 அந்த புதிய தகவல் என்ன என்று நீங்கள் யோசிப்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?அது இயக்குனர் மிஷ்கின் தான்.

 ஏற்கனவே முன்னணியில் இருக்கின்ற பல நடிகர்கள் இதுபோல ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் ஐ எடுத்து செய்து சாதித்து வருகிறார்கள். உதாரணமாக நாம் விஜய்சேதுபதியை எடுத்துக்கொள்ளலாம்.

 இந்த வரிசையில் இயக்குனர்களாக இருந்து நடிகர்களாக மாறிய நிறைய நடிகர்களின் திரைப்படங்கள் பற்றி நமக்கு நன்றாக தெரியும்.

 அந்த வரிசையில் தற்போது இயக்குனரான இருந்தது கதாநாயகனாக அல்லாமல் வில்லனாக புதிய தோற்றத்தில் மிஷ்கின் வர இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 மேலும் இந்தக் கேரக்டரை இயக்குனர் மிஷ்கின் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை பார்ப்பதற்காகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்று கூறலாம்.

சிவகார்த்திகேயன் மற்றும் மிஸ்கின் இருவருக்குமான காட்சிகள் படப்பிடிப்பு செய்ய உள்ள நிலையில் சினிமா வட்டாரங்களில் மிஷ்கினின் வில்லன் ரோல் பற்றிய பேச்சுக்கள் தான் பிரபலமாகி வருகிறது.

 எனவே பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கும் சிவகார்த்திகேயனோடு வில்லனாக கைகோர்க்கும் மிஸ்கின் இந்த புதிய ஆவதாரத்தோடு வெளிவருகின்ற எந்த மாவீரன் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே முனு முனுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் பிரின்ஸ் பட வெற்றியைத் தொடர்ந்து இந்த படமும் மாபெரும் வெற்றி அடையும் என்று அனைவரும் கருதுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …