இமான் அண்ணாகிட்ட மன்னிப்பு கேக்கணும்.. வாய் திறந்த சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வீடியோ..!

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சின்னத்திரையின் மூலமாக திரைத்துறையில் பிரபலமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி திரைப்படங்களாக நடித்து வந்தார்.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சீரியஸ் கதாநாயகனாக மாற்றிக் கொண்டார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து எல்லா வகையான திரைப்படங்களிலும் நடிக்கும் ஒரு கதாநாயகனாக உருவெடுத்தார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படமும் வெகு சீக்கிரத்திலேயே திரைக்கு வர இருக்கிறது.

எஸ்.கேவின் வளர்ச்சி:

சிவகார்த்திகேயனை பொருத்தவரை சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரைகளும் சரி நல்ல பெயர் வாங்கிய ஒரு நடிகர் என்று கூறவேண்டும். பல நடிகர்கள் குறித்து பல சர்ச்சைகள் சினிமாவில் இருந்த பொழுதும் சிவகார்த்திகேயன் குறித்து அவ்வளவாக சர்ச்சைகள் இருந்தது கிடையாது.

மேலும் தனது திரைப்படத்தை குழந்தைகள் அதிகமாக ரசித்து பார்க்கிறார்கள் என்பதை அறிந்த சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்தாலும் கூட பிறகு கவர்ச்சியை முழுமையாக குறைத்துக் கொண்டார்.

டான் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் பாடல்களில் கூட கவர்ச்சியாகவோ அல்லது நெருக்கமாகவோ நடித்திருப்பதை பார்க்க முடியாது. இப்படி இருக்கும் பொழுது சிவகார்த்திகேயன் குறித்து பெரும் பிரச்சனை ஒன்று போன வருடம் உருவானது.

இமானின் பகீர் பேட்டி:

இமான் பேட்டி கொடுக்கும் பொழுது சிவகார்த்திகேயனால்தான் எனது குடும்பம் பிரிந்தது. சிவகார்த்திகேயனுக்கு எந்த காலத்திலும் நான் திரும்ப இசையமைக்க மாட்டேன். மேலும் எனது குழந்தையின் எதிர்காலம் கருதிதான் சிவகார்த்திகேயன் குறித்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் இசையமைப்பாளர் இமான்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் முன்பு இமானிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று ட்ரண்டாகி வருகிறது அதில் சிவகார்த்திகேயன் கூறும்பொழுது நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது இமான் அண்ணாவிடம்தான் கேட்க வேண்டும்.

ஏனெனில் இப்போது நான் கொஞ்சம் படங்களில் பிஸியாக இருக்கிறேன் அதனால் அவரை பார்க்கவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை. இமான் அண்ணனுக்கும் எனக்கும் இருக்கும் நட்பு உறவு மிகவும் நாகரிகமானது நாங்கள் இரு குடும்பமும் எப்பொழுதும் ஒன்றாக சேர்ந்துதான் சாப்பிட போவோம்.

ஆனால் இப்பொழுது எல்லாம் அப்படி சாப்பிட செல்வதற்கு நேரமே இல்லை இதனால் இமான் அண்ணா என் மீது அப்சட்டில் இருக்கிறார். நான் எப்பொழுதும் அவரை அண்ணன் என்று தான் கூப்பிடுவேன். அவரும் என்னை தம்பி என்றுதான் கூப்பிடவார் எங்களுக்குள் எந்த ஈகோவும் இருந்தது கிடையாது. ஆனால் இப்பொழுது எங்களால் சந்தித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version