நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் நீண்ட காலமாக தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த படத்திற்கு பின்னால் இருந்த பொருளாதார சிக்கல்கள் தான் படத்திற்கு தடையாக இருந்தன எனக் கூறப்பட்டது.
எனவே இடையில் இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார் சிவகார்த்திகேயன். அந்த படங்களின் நடித்த பணத்தை வைத்து படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடலாம் என்ற முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்.
இப்படி சினிமாவில் சமத்துப் பிள்ளையாக காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வந்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் அவருடைய மனைவி விவாகரத்து பிரச்சனையில் முக்கியமான வில்லங்கத்தை செய்த நபர் என தெரியவந்தது.
இதனை இசையமைப்பாளர் டி இமான் பேட்டி ஒன்றில் வேதனை ததும்ப பேசி இருந்தார். இதனால் நடிகர் சிவகார்த்திகேயனின் இமேஜ் டேமேஜ் ஆனது.
சரி இமானின் பேச்சுக்கு ஏதேனும் பதிலடி கொடுப்பார் அல்லது மறுப்பு தெரிவிப்பார் அல்லது இமான் இதனை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என விளக்கம் கொடுப்பார் என்றெல்லாம் ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை எதிர்பார்த்தார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயன் திருடனுக்கு தேள் கொட்டியது போல எந்த சத்தமும் போடாமல் தன்னுடைய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த விவகாரம் குறித்து வாய் திறந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இந்த படம் வெற்றி பெற்று விட்டால் சிவகார்த்திகேயனை யாராலும் அடிச்சுக்க முடியாது.. அவருடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றெல்லாம் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது ஒருப்பக்கம், அயலான் படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயனின் 24AM பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கிய 10 கோடி ரூபாய் கடனை பிரபல தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதில், வெறும் மூன்று கோடி ரூபாய்யை மட்டும் செலுத்திய நிலையில் மீதி இருக்கக்கூடிய 7 கோடி மற்றும் அதற்கு உண்டான வட்டியை வழங்கவில்லை என டி.ஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
வழக்கை துரிதமாக விசாரித்த நீதிமன்றம் அயலான் திரைப்படத்தை நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்ய தடை விதித்திருக்கிறது. எனவே, அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா..? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஒரு வேலை டி ஆர் எஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த கொடுக்க வேண்டிய கடனை திருப்பி கொடுத்து விடும் பட்சத்தில் அயலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டுமில்லாமல் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலம்பனா என்ற படமும் நான்கு வாரம் தடை செய்யப்பட்டிருக்கிறது.