நடிகர் தர்ஷன் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி குன்னூரில் பிறந்தவர். தமிழில் விரல்விட்டு இன்னும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான ஒரு முகமாக இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கானா திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு தும்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும் வெற்றி பெற்ற இவர் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என்ற திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.,
நடிகர் தர்ஷன் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு என்ற திரைப்படத்தில் வங்கி ஊழியராக கவின் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருப்பார். இவருடைய பெயர் என்ன என்று கூட படத்தில் காட்டப்படாது. நடிகர் சிவகார்த்திகேயனின் தம்பிகளில் ஒருவராக ரஜினி முருகன் திரைப்படத்தில் நின்று கொண்டு இருப்பார் நடிகர் தர்ஷன்.
இவர் சிவகார்த்திகேயனுக்கு படத்தில் மட்டும் தம்பி கிடையாது. நிஜத்திலும் சிவகார்த்திகேயனை அண்ணா என்று தான் அழைப்பாராம் நடிகர் தர்ஷன். எப்படி என்றால் கல்லூரியில் படிக்கும் பொழுது தன்னுடைய சீனியர் ஐயப்பன் என்பவருடைய நெருங்கிய நண்பராக இருந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தன்னுடைய சீனியர் ஐயப்பன் மூலமாகத்தான் சிவகார்த்திகேயனின் தொடர்பும் தர்ஷனுக்கு கிடைத்திருக்கின்றது. அதன்பிறகு சிவகார்த்திகேயனும் தரிசனம் நெருக்கமாக இருக்கிறார்கள்.
கோயம்புத்தூர் செல்லும் பொழுதெல்லாம் தர்ஷனின் வீட்டிற்கு சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படியாக இவர்கள் நெருக்கம் வளர்ந்து ரஜினி முருகன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
அதன் பிறகு கனா திரைப்படத்தில் முரளி கிருஷ்ணா என்ற கேரக்டரில் ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார். சமீபத்தில் தும்பா படத்தில் முழு நீள ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் முழு நேர சினிமாவில் இயங்க முடிவு எடுத்திருக்கிறார்.