மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி யார் தெரியுமா? விருமன் பட கதாநாயகி அதிதியே …

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன்  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக  அதிதி நடித்திருந்தார். வேறு யாரும் இல்லை நமது பிரம்மாண்ட நடிகர் ஷங்கரின் இரண்டாவது மகள்தான் இவர் டாக்டர் பட்டம் பெற்றவர்.

விருமன் படத்தில் கஞ்சா பூ கண்ணால பாடலுக்கு இவர் நடித்திருந்தார் விதம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

முதல் படத்திலேயே ஆடல் பாடல் நடிப்பு என்று எல்லாவற்றிலும் அசத்தி இருந்த இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் இவருக்கான கதையை இவர் தந்தை தேர்வு செய்து உள்ளனர். எனவே இவரின் இரண்டாவது படம் சிவகார்த்திகேயன்  உடன் தான் இவர் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் பெயர் மாவீரன் என்று கூறப்படுகிறது.

முதல் பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயன் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் தமிழ்நாட்டில் அதுபோலவே தெலுங்கிலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்.

மண்டேலா  பட இயக்குநர் அஸ்வின் மடோனா இயக்கும் புதிய படமான ‘மாவீரன்’ இந்தப் படம் தமிழ், தெலுங்கில் இரட்டை மொழி படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என பெயரிடப்பட்டது. இப்படத்துக்கான இசையை பரத் ஷங்கர் இசையமைக்கிறார். பிரின்ஸ் படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

தளபதி படத்தில் வரும் ரஜினியினை லுக்கை போலவே மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் லுக் இருப்பதால் தான் படத்திற்கு மாவீரன் என்ற பெயர் வைத்திருக்கிறார்களோ?

மாவீரன் படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் எடுத்த சில படங்களை அதிதி தனது இன்ஸ்டா பக்கங்கள் பதிவு செய்திருக்கிறார்.

கடைசியாக வெளியான சிவாவின் டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.இது போல மாவீரன் சாதிப்பாரா?

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …