ஊத்திக்கொண்ட பிரின்ஸ் திரைப்படம்… முட்டிக் கொள்ளும் மாவீரன் டீம்… என்ன செய்யப் போகிறார் சிவ கார்த்திகேயன்…!

டாக்டர், டான் திரைப்பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது முந்தைய படங்களைப் போலவே காதல் ஆக்சன் காமெடி என்று கலக்கியிருந்த போதும் அந்த பருப்பு வேகவில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் எதிர்பாராத நிறைய நெகட்டிவ் கமெண்டுகளை இந்த படம் தொடர்ந்து பெற்று வந்ததால் சரியாக ஓடவில்லை.

 நிச்சயமாக நன்றாக ஓடி பெயரை பெற்று தரும் என்று நினைத்துப் நினைத்திருந்த இந்த படம் இவரை அதல பாதாளத்தில் தள்ளி மேலும் கடனை அதிகப்படுத்தி விட்டது. இதனால் மிகப்பெரிய கலக்கத்தில் இருக்கும் சிவ கார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதனை அடுத்து பிரின்ஸ் படத்திற்குப் பின்பு மாவீரன் படத்தில் இவர் நடித்து வருகிறார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதியும் நடித்திருக்கிறார்.

பிரின்ஸ் படம் வெளியிட்ட தொடர்ந்து இவர் மாவீரன் படத்திற்கு நடிக்கச் சென்ற போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கும் இயக்குனருக்கும் இடையே சில மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

 இதற்கு காரணம் டைரக்டர் அல்ல சிவா தான் என்றும் பிரின்ஸ் படம் தோல்வியினால் சில காட்சிகளை இப்படி மாற்ற வேண்டும் அப்படி மாற்ற வேண்டும் என்று அதிகளவு டைரக்டரை டார்ச்சர் செய்து வருவதாக கூறுகிறார்கள்.

இதன் காரணமாகத்தான் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறிக் கொள்கிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மனநிலை தற்போது எப்படி இருக்கிறதோ என்று அவரது ரசிகர்கள் மிகவும் கவலையோடு இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மேலும் படப்பிடிப்பில் எந்த விதமான சங்கடங்களும் மோதல்களும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்தபின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் இப்போது அவருக்கு ஒரு மன அமைதி தேவை என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam