சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி ! கதைக்கு முக்கியத்துவம் குடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும் பிறகு இவருடைய கடின உழைப்பால் இவர் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு இணையாக தற்பொழுது வளர்ந்துள்ளார்.

ஒரு பக்கம் நடிகராக படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் திறமையான இயக்குனர்களுக்கு தன்னுடைய எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் கானா, டாக்டர், டான் போன்ற படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்றன.

இந்த படத்திற்கு கொட்டு காளி என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகியுள்ளது. அதில் சேவலை மையமாக வைத்து இப்படம் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த டீசரை பார்க்கும் பொழுது கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஒரு சேவலை மையமாக வைத்து இந்த கதை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

ஏனென்றால் ஏற்கனவே விடுதலை திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

அதை பார்த்த ரசிகர்கள் படம் தரமாக இருப்பதாகவும் நம்புகிறார்கள் அதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதால் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்தப் படத்தை கூழாங்கல்  எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய  வினோத் ராஜ் இயக்கவுள்ளார். ஒரு சாதாரண கதையை நல்ல திரைப்படமாக மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர் வினோத் ராஜ்.

இந்தப் படமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கக்கூடிய நல்ல படமாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை காண நம்ம தமிழகம் இணையதளப் பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …