பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி அதற்கேற்றார் போல தற்போது நடந்துள்ள ஒரு விஷயம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரெமோ படத்தின் வெளியீட்டு விழா மேடையில் தன்னுடைய படத்தை தடுக்கிறார்கள், எனக்கு தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள், எத்தனை பிரச்சினையை தான் நான் சமாளிப்பது, ஒரு பிரச்சனையை சமாளித்தால் இன்னொரு புதிய பிரச்சினை கொடுக்கிறார்கள்.
எனக்கு என்ன பிரச்சனை வேணாலும் கொடுத்துவிட்டு போகட்டும். என்னுடைய படத்தை ரிலீஸ் ஆகாமல் தடுக்கிறார்கள். என்னோட படத்தை எதுக்குங்க தடுக்குறீங்க..? என்று கண்ணீர் விட்டு கதறி இருந்தார்.
SK கண்ணீருக்கு காரணம் யார்..?
இது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த கண்ணீருக்கு பின்னால் இருப்பது யார்..? என்று இது நாள் வரை மூடு மந்திரமாக, ரகசியமாக இருந்தது. சிவகார்த்திகேயனும் இது குறித்து எந்த இடத்திலும் பதிவு செய்தது கிடையாது.
தற்பொழுது இந்த விவகாரம் வெளியில் வந்திருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் மீது திருட்டு புகார் கூறியிருந்தார்.
அவர் படம் எடுக்க கொடுத்த பட்ஜெட்டில் அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திருடக்கூடிய ஒரு ஆள். அவர் திருடாமல் படம் எடுத்திருந்தால் இந்நேரம் பாலிவுட் ஹாலிவுட் வரை சென்றிருப்பார்.
ஆனால் அவரிடம் இருக்கக்கூடிய அந்த திருட்டு புத்தி தான் அவர் இங்கே உலாத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு படம் வாய்ப்பு கிடைப்பதில்லை. எந்த ஹீரோவும் அமீர் படம் என்றால் கமிட் ஆவதில்லை என்று மோசமான முறையில் இயக்குனர் அமீரை சாடி இருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர்கள் சமுத்திரகனி மற்றும் சசிகுமார் ஆகியோர் முன்வந்து ஞானவேல் ராஜா சொல்வது பொய் என்றும், பருத்திவீரன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கால்வாசி தான் படம் முடிந்து இருக்கிறது. ஆனால் என்னால் தொடர்ந்து படத்திற்கு செலவு செய்ய முடியாது என்னமோ செய்து கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார் ஞானவேல் ராஜா.
அமீரிடம் படத்தை கொடுத்த சூரியா..
அப்பொழுது நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யா அமீரிடம் வந்து அண்ணா நீங்களே என்னுடைய இந்த படத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அப்போது என்ன செய்வது..? ஏது செய்வது..? என்று தெரியாமல் இருந்தோம்.
அந்த நேரத்தில் எங்களுக்கு தெரிந்தவர்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் என பலரிடம் ஒரு லட்சம், ரெண்டு லட்சம் என கடன் பெற்று அந்த படத்தை நகர்த்திச் சென்றோம். கடன் கொடுத்தவர்களிடம் பணத்தை வாங்கி வந்து படக்குழுவிடம் கொடுத்ததே நான் தான்.
உண்மையை சொல்ல போனால் படத்தின் தயாரிப்பாளர்கள் என்று ஒரு குழுவே இருக்கிறது. ஆனால், தயாரிப்பாளர் என்று உங்களை நீங்களே பதிவு செய்து கொண்டீர்கள்.
இதற்கு அமீர் சம்மதம் தெரிவித்தார். நீங்கள் அமீர் குறித்து மிக மோசமாக பேசியிருக்கிறீர்கள். இதையெல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார் சமுத்திரக்கனி.
பணத்தை திருப்பி வாங்காமலே ரிலீஸ் பண்ண விட்டேன்..
மறுபக்கம் சசிகுமார் பருத்திவீரன் திரைப்படம் பொருளாதார பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருந்தபோது என்னுடைய பணத்தை கடனாக கொடுத்து அந்த படத்தை முடிக்க உதவி செய்தேன். அந்த பணத்தை நான் வாங்கும் திரும்பி வாங்கும் முன்பே படத்தை ரிலீஸ் செய்யவும் அனுமதித்தேன் என சசிகுமார் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் ஞானவேல் ராஜா வீசிய அசிங்கம் அவரையே திருப்பி தாக்கியிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் தான், சிவகார்த்திகேயன் அழுததற்கான காரணமும் ஞானவேல் ராஜா தான் என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி இருந்தார் என்றும் ரஜினி முருகன் படப்பிடிப்பு முடிந்ததும் 2015 ஆம் ஆண்டு மே மாதம் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. மேலும், சிவகார்த்திகேயனை வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க விடாமல் தொந்தரவு செய்து இருக்கிறார் ஞானவேல் ராஜா.
இழுத்தடிக்கப்பட்ட சிவகார்த்திகேயன்..
இதோ ஆரம்பித்து விடுவோம்.. அதோ ஆரம்பித்து விடுவோம்.. என்று சரியான நாள் தேதியை எதுவும் கூறாமல் படத்தை இழுத்து அடித்துக் கொண்டே வந்திருக்கிறார்.
இதனால் பொறுமை இழந்த சிவகார்த்திகேயன் வேறுபடத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில் வேறு எந்த தயாரிப்பாளரும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை.
SK வேகத்தை குறைக்க திட்டம்..
இங்கே, நடிகர் சிவகார்த்திகேயனின் வேகத்தை மட்டுப்படுத்த முயற்சி நடந்து இருக்கிறதோ.. என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் படம் நடிக்க வேண்டும் என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அந்த படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பிக்காமல் அட்வான்ஸ் வாங்கிய காரணத்தினால் வேற எந்த படத்தில் நடிக்க விடாமல் வேறு எந்த தயாரிப்பாளரையும் சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுக்க விடாமல் என ஒரு மிகப்பெரிய லாபி இங்கே சிவகார்த்திகேயனின் வேகத்தை குறைக்க வேலை செய்து இருக்கிறதோ.. என்ற சந்தேகம் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க.. சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்.டி ராஜா இருவரும் ஒன்றிணைந்து ரெமோ என்ற திரைப்படத்தை ஆரம்பித்தார்கள். அந்த திரைப்படம் உருவாகி வெளியிட்டிருக்க தயாரானது.
அந்த நேரத்தில் ஞானவேல் ராஜா மற்றும் சினிமா துறையில் உள்ள முக்கிய புள்ளிகள் ஆகியோர்களை கொண்டு சிவகார்த்திகேயன் அழைத்து கட்டப்பஞ்சாயத்து வைத்து மிரட்டி இருக்கிறார்கள்.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் படம் தடுக்கப்பட்டது. அதனால் அவர் அழுதார் எல்லாம் சரிதான்.
ஆனால், தற்போது இசையமைப்பாளர் இமான் அழுகிறாரே.. அவருடைய குடும்பம் பிரிந்து விட்டதே.. இதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் துரோகம் தான் என்றெல்லாம் தகவல்கள் வருகிறதே.. இது குறித்து சிவகார்த்திகேயன் வாயே திறக்காமல் இருக்கிறார்.
அப்படி என்றால் இமான் அழுதால்மட்டும் பரவாயில்லையா..? என்று கடுப்பாகி கமெண்ட் செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் ரெமோ வெற்றி விழாவில் அழ காரணம் பல வருஷமா புரியாத புதிராக இருந்தது.
ஆனா அவரு அழுத்தத்துக்கு பின்னடி ஞானவேல் ராஜா இருப்பானு நா கொஞ்சம் கூட எதிற்பாக்கல. அதற்கான காரணம் மற்றும் ஆதாரங்கள் இந்த த்ரெட்டில் 👇 pic.twitter.com/RpF5eW60Ar
— யாரோ ஒருவன் (@sk_ayalaan) November 26, 2023