அரசியல் குறித்து இப்படி பேசிட்டாரே…. சிவகார்திகேயனுக்கு கட்டம் கட்டப்போறாங்க!

திரைப்பட பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளந்த நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று நட்சத்திர ஹீரோவாக முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

முழுக்க முழுக்க தனது திறமையால் வளர்ந்து வந்து மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பிறகு திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

நடிகை சிவகார்த்திகேயன்:

இவர் தொகுப்பாளராக இருக்கும்போது நடனமாடி இருக்கிறார், பாடல் பாடி இருக்கிறார், மிமிக்கிரி செய்திருக்கிறார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராக இருந்துள்ளார்.

இப்படி மேடை சிரிப்புரையாளராக இருந்து இன்று முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோது மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார்.

அதன் பிறகு பசங்க திரைப்படத்தின் இயக்குனரான பாண்டியராஜ் இயக்கத்தில் முதன்முதலில் இவர் நடித்த திரைப்படம் தான் மெரினா .

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகராக பார்க்கப்பட்டார்.

மெரினா படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று படத்தில் நடித்திருந்தார் . அதை எடுத்து மனம் கொத்தி பறவை ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள்:

மேலும் மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ,நம்ம வீட்டு பிள்ளை, மாவீரன், அயலான் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த பிரபலமான நடிகராக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி திரைப்படத்திற்கு பல பின்னணி பாடல்களையும் பாடி இருக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த அயலான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது.

அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

வருகிற அக்டோபர் 31ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான கடைசி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு அதை அடுத்தது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தின் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இது தவிர தற்போது அவர் தயாரிப்பாளராகவும் களமிறங்கி சூரி நடிப்பில் வெளியாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் சினிமாவில் சில பெரிய பிரபலங்கள் தடை விதிப்பதாகவும் அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகும் .

அரசியல் குறித்து சிவகார்த்திகேயன்:

அதை சிவகார்த்திகேயனை வெளிப்படையாக பல பேட்டிகளில் கூட தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் நீங்கள் எப்போது அரசியல் வருவீர்கள்?

அரசியல் ஆசை ஏதாவது உங்களுக்கு ஆசை இருக்கிறதா? என கேட்டதற்கு. ஐயோ எனக்கு அரசியல் ஆசையெல்லாம் சுத்தமாவே கிடையாது.

சினிமாவில் இருக்கிற அரசியலை என்னால சமாளிக்க முடியல… இதுல நிஜ அரசியலுக்கு வேற போகணுமா? எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லவே இல்லப்பா.

முதல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நல்லா நடிக்கணும். அதுதான் என்னுடைய இப்போது இலட்சியமா இருக்கு என்று ஓப்பனா பேசி இருக்கிறார் நடிகை சிவகார்த்திகேயன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version