வரும் தீபாவளிக்கு வெளிவரக்கூடிய பிரின்ஸ் படத்தில் மிகச் சிறப்பான முறையில் தனது நடிப்புத் திறனை சிவகார்த்திகேயன் வெளிபடுத்தியிருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகளை பல ஊடகங்களுக்கு சிவகார்த்திகேயன் அளித்து வருகிறார்.
இந்த சமயத்தில்தான் இவர் சீமராஜா தோல்விக்கான காரணத்தை மனம்விட்டுப் பேசி இருக்கிறார். அதாவது இந்த படத்தை பொறுத்தவரை இது எப்படிப்பட்ட படம் என்பதை ரசிகர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை அதனால்தான் இந்த படம் தோல்வியடைந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும் ரசிகர்களை குறை சொல்வதோடு நின்று விடாமல் அந்த படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு சரியான முறையில் நான் கொண்டு சேர்க்கவில்லை என்பது மற்றொரு காரணம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு முன்பு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் இந்த படங்கள் அனைத்துமே காமெடியை மையமாகக் கொண்டு வெளி வந்ததால் அதே காமெடி கலவையை நினைத்து ரசிகர்கள் வந்து சீமராஜாவை பார்க்க வந்திருப்பார்கள்.அந்த நகைச்சுவை இல்லாத காரணத்தால் கூட அது தோல்வி அடைந்து இருக்கலாம் என்றார்.
மேலும் இந்தப் படத்தில் வரும் மிக முக்கிய கேரக்டரான கடம்ப வேல் ராஜாவின் வரலாற்றை நன்கு தெரிந்துகொள்ள ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை உருவாக்கி இருக்க வேண்டும் அதை தவறிவிட்டார்கள் என்று கூறினார்.
மாபெரும் வீரனாக இருந்த கடம்பவேல் ராஜாவின் வாரிசு கோழையாக காட்டப்பட்டது.பின் வீரனாக மாறியதற்கு ஒரு வலுவான காரணத்தை தெரிவிக்க வேண்டும் அதை செய்யாததும் இந்த படத்திற்கு நெகட்டிவான விஷயங்களாக அமைந்துவிட்டது.
தற்போது சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் எந்த பதில் உண்மையிலேயே சிறப்பாக இருந்து அந்தப் படம் எடுத்து இருந்தால் ஒரு சமயம் படம் சக்கை போடு போட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எனவே தற்போது சிவகார்த்திகேயன் கூறிய எந்த கருத்துக்களை அவரின் ரசிகர்கள் மிகவும் கவனத்தோடு கேட்டு இதை இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று பேசிக்கொள்கிறார்கள்.