ஆரம்பத்துல என்ன இவங்கதான் வளர்த்துவிட்டாங்க.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண குடும்பத்தில் பிறந்து சின்னத்திரை மூலமாக அதிக பிரபலம் அடைந்து தற்சமயம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் இடத்தை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் பயணம் என்பது ஒவ்வொரு இளைஞர்களுக்குமே ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. பலரும் சிவகார்த்திகேயனை பார்த்து அவர்களும் சிவகார்த்திகேயன் போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு அவரது வெற்றி அமைந்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்

இருந்தாலும் கூட சிவகார்த்திகேயன் சில நேரங்களில் பேசும் பொழுது அது அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. விஜய் டிவியில் இருந்த சிவகார்த்திகேனுக்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்று கொடுத்தவர் நடிகர் தனுஷ் என்பது அப்பொழுது பேசப்பட்டு வந்த விஷயமாக இருந்தது.

இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது சினிமாவில் யாரும் யாரையும் வளர்த்து விட முடியாது. என்னை அப்படியே சொல்லி பழக்கி விட்டார்கள். அதனால் உங்களை வளர்த்து விட்டார்கள் என்று கூறினால் அதை எல்லாம் நம்பாதீர்கள் என்பது போல பேசியிருந்தார் சிவகார்த்திகேயன்.

இவங்கதான் வளர்த்துவிட்டாங்க

இது அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. ஒரு பக்கம் விஜய் டிவியை தான் சிவகார்த்திகேயன் பேசுகிறார் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் மற்றொரு தரப்பில் தனுஷை தான் சிவகார்த்திகேயன் மறைமுகமாக பேசுகிறார் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். அதில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது ஏதோ ஒரு விஷயமோ, ஒரு திரைப்படமோ எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்து விட முடியாது.

நான் பெரிதாக அது இது எது என்கிற நிகழ்ச்சியில் 150-க்கும் அதிகமான எபிசோடுகளை தொகுத்து வழங்கினேன். அந்த சமயத்தில் யார் இந்த பையன் நமது குடும்ப ஆள் போல மிக ஜாலியாக எதார்த்தமாக பேசுகிறானே என்று மக்கள் எனக்காக அந்த நிகழ்ச்சியை பார்க்க துவங்கினார்கள்.

முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்

இந்த நிலையில்தான் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அங்கு மிக கலகலப்பாக பேசியதன் மூலமாக எனக்கு சினிமா துறையினர் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்துதான் பாண்டிராஜ் சார் அவர் இயக்கிய மெரினா திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பை கொடுத்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் எழில் மனங்கொத்தி பறவையில் வாய்ப்பு கொடுத்தார். நடிகர் தனுஷ் எனக்கு எதிர்நீச்சல் படத்தில் வாய்ப்புகளை கொடுத்தார் .இப்படி இவர்கள் எல்லோருமே நான் வளர்வதற்கு சின்ன சின்ன வகையில் உதவி செய்திருக்கின்றனர்.

ஆனால் ஏதோ ஒரு திரைப்படம் அல்லது ஒரு நிகழ்வு என்னை வளர்த்து விட்டு விடவில்லை என்று கூறி கூறியுள்ளார் சிவகார்த்திகேயன் அதன் மூலமாக தான் வளர்ந்து வந்ததில் விஜய் டிவி மற்றும் தனுஷ் இருவருக்குமே பங்கு உண்டு என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version